fbpx

சமைக்குற இடத்துல இந்த பொருளை வைக்காதீங்க..!! காரணம் தெரிஞ்சா நீங்களும் இப்படி பண்ண மாட்டீங்க..!!

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களிலும் அறிவியல் கலந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் கூட ஒவ்வொன்றையும் தெளிவாக புரிய வைத்துள்ளனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் அற்பமாக எண்ணி அவற்றை பின்பற்ற மறந்து விடுகிறோம்.

அந்தவகையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை அடுப்பின் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா..? வாங்க.. இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். நம்மைப் பொறுத்தவரை இது வெறும் உப்பு தான். ஆனால், இதில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் இருக்கிறது. நம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்று அயோடின். உடலில் அயோடின் சரியான அளவு இல்லாததால் தான் தைராய்டு போன்ற பிரச்சனைகள் வருகிறது.

பொதுவாகவே “தைராக்ஸின்” என்ற ஹார்மோன் மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் உதவுகிறது. அந்த வகையில், அயோடின் தான் இந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட பெரிதும் உதவுகிறது. இப்படி முக்கியமாக விளங்கும் அயோடின், நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் தான் இருக்கிறது.

உப்பை கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனெனில், உப்பில் இருக்கும் அயோடின் உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியும். எனவேதான் இவற்றை கண்ணாடி பாத்திரத்தில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல், உப்பை ஒளி உட்புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளியின் தாக்கத்தால் அயோடின் அழிந்துவிடும். அதுபோல் உப்பு டப்பாவை அடுப்புக்கு அருகில் வைக்க கூடாது என்பதற்கான காரணமும் இதுவாகும். உப்பில் இருக்கும் அயோடின் அழிந்த பின் அவற்றை உணவில் சேர்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

Chella

Next Post

இடது கை பழக்கம் கொண்டவரா நீங்கள்?… உங்களுக்கே தெரியாத உண்மைகள்!

Mon Oct 2 , 2023
இடது கை பழக்கம் கொண்டவர்கள் சமூகத்தால் சில நேரங்களில் கேலிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால் நீங்கள் தான் மற்றவர்களை விட அதிக புத்தியும் சக்தியும் கொண்டவர்கள். மேலும் இடது கை பழக்கம் உள்ளவர்களின் நமக்கு தெரியாத மிகவும் அற்புதமான தகவல்களை பற்றி பார்ப்போம். உலக மக்கள் தொகையில் சுமார் 10 லிருந்து 13% வரை இடது கை பழக்கம் உடையவர்கள். இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி […]

You May Like