fbpx

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்…! மத்திய அரசு முக்கிய தகவல்…!

மருத்துவமனைகள், சுகாதார நல மையங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார ஆணையம் வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மென்பொருள், அதற்கான திட்டமிடுதல், மதிப்பீடு, தகவல் தொடர்பு சாதன வன்பொருள் கொள்முதல் ஆகியவற்றை இந்த வன்பொருள் கொள்கை விளக்குகிறது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதல்படியே மருத்துவமனைகள் டிஜிட்டலை நோக்கி முன்னேறுவதுதான். மேலும், சுகாதார சேவைகளின் தேவையை பொறுத்து, தகவல் தொடர்பு வழிமுறைகளை கொண்ட கொள்கையை உருவாக்க பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாநிலங்கள் தங்களது சுகாதார நிறுவனங்களில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பின்பற்றும் வகையில் இந்த வன்பொருள் கொள்கையை தேசிய சுகாதார ஆணையம் உருவாக்கியுள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவமனைகளை டிஜிட்டல் ஒன்றோடு ஒன்று இணைத்து எளிய வாழ்தலை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஊக்குவிக்கிறது. இந்த வன்பொருள் கொள்கையை https://abdm.gov.in:8081/uploads/Hardware_Guidelines_ABDM_e162cf7a7b.pdf என்ற இணைப்பின் மூலம் காணலாம்.

Vignesh

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்...!

Tue Aug 23 , 2022
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BSW, B.Com, BA Degree  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like