fbpx

நெருங்கும் கோடைக்காலம்…வீட்டிலேயே ஜில்லுனு நட்ஸ் குல்ஃபி செய்யலாம்… சூப்பரான ரெசிபி இதோ!…

சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவிருப்பதால், உடல் சூட்டை தணிக்கும் வகையில் வீட்டிலேயே சுலபமாக நட்ஸ் குல்ஃபி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களான இளநீர், பழ வகை ஜூஸ் மற்றும் ஐஸ்கீரிம் எனச் சாப்பிடுவது வழக்கம். மேலும், இந்த காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் அல்லது ஐஸ் தான். மேலும் மதிய வேளைகளின் சோர்வுகளும், தூக்கத்தை வர வைக்கும். இந்தநிலையில், இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளது. அதனால், உடலுக்கு ஆரோக்கியமாகவும், நம் அனைவருக்கும் பிடித்தமாதிரி நம் வீட்டிலேயே ஜில்லுனு நட்ஸ் குல்பி சுலபமாக செய்யலாம்.

நட்ஸ் குல்பி செய்ய தேவையான பொருட்கள்: நட்ஸ் பவுடர் – 1/4 கப், சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 1/2 லிட்டர்,குங்குமப்பூ – சிறிதளவு,சர்க்கரை – 8 டேபிள்ஸ்பூன், குல்ஃபி எசன்ஸ் – சிறிதளவு, சர்க்கரை இல்லாத கோவா- 100 கிராம்,

ஒரு பாத்திரத்தில் நட்ஸ் பவுடருடன், சிறிதளவு பால் சேர்த்து அதில் சோள மாவு சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் மீதமுள்ள பால் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் காய்ச்சிக் கொள்ளவும் அதில் 400 கிராம் கோவா சேர்த்து நன்றாகக் கிளறவிட்டு, 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன் பின், பாலில் கலக்கிவைத்த சோள மாவைச் சேர்த்து, மிதமான சூட்டில் நன்றாக கிளறிவிட்டு பால் கெட்டியான பின், அதில் அரைத்த நட்ஸ் பவுடரை சேர்த்துக் கிளறவும். அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, அதில் குல்ஃபி எசன்ஸ் சேர்த்து ஆறவைக்கவும். பின்பு, அதை 10லிருந்து 15 நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் இனிப்பான ஜில்லென்ற நட்ஸ் குல்ஃபி ரெடியாகி விடும்.

Kokila

Next Post

சாப்பிட வருபவர்களுக்கு ’கைதி’ பட பாணியில் விலங்கு.. ஜெயில் உணவகத்திற்கு குவியும் மக்கள்..

Tue Feb 7 , 2023
பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இங்கு உணவருந்த வருபவர்களுக்கு கைகளில் விலங்கும் போடப்படுவது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரும் செல்ல விரும்பாத இடங்களில் ஒன்றுதான் சிறைச்சாலை. இந்தநிலையில் பிகார் மாநிலம் பாட்னாவில் சிறைச்சாலை மாதிரியே உணவகம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஏராளமான உணவகங்கள் ஜெயில் போன்று உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், […]
சாப்பிட வருபவர்களுக்கு ’கைதி’ பட பாணியில் விலங்கு.. ஜெயில் உணவகத்திற்கு குவியும் மக்கள்..

You May Like