fbpx

சூப்பர் அறிவிப்பு..!! 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்..!! எப்படி வாங்குவது..? முழு விவரம் உள்ளே..!!

தனிப்பட்ட விவசாயிகள்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ வாங்குவதற்கு மானியம்‌, இளைஞர்களை விவசாய தொழிலில்‌ ஈர்த்திட, விவசாயிகள்‌, தொழில்‌ முனைவோர்கள்‌, பதிவு செய்த விவசாய சங்கங்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌ மூலம்‌ கிராம, வட்டார அளவிலான வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ நிறுவ, மானியம்‌ போன்ற வகைகளில்‌ வேளாண்மை இயந்திர மயமாக்குதல்‌ திட்டத்தினை தமிழகத்தில்‌, 2022-23இல் செயல்படுத்துவதற்காக, ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌ என வேளாண்‌ நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.41.67 கோடி நிதியில்‌ இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் அறிவிப்பு..!! 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்..!! எப்படி வாங்குவது..? முழு விவரம் உள்ளே..!!

விவசாயிகளுக்கு மானிய விலையில்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌

இத்திட்டத்தில்‌, தனிப்பட்ட விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியத்திலும்‌, சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண்‌ விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்திலும்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ விநியோகம்‌ செய்யப்படும்‌.

எதற்கெல்லாம் எவ்வளவு மானியம்..?

டிராக்டர் – ரூ.5 இலட்சம்‌

மினி டிராக்டர் – ரூ.2.25 இலட்சம்‌

பவர்டில்லர் – ரூ.85,000/-

நெல்‌ நடவு இயந்திரம் – ரூ.5 இலட்சம்‌

களையெடுக்கும்‌ இயந்திரம் – ரூ.63,000/-

சுழல்‌ கலப்பை – ரூ.44,800/-

விதைப்புக்‌ கருவி – ரூ.24,100/-

நிலக்கடலை அறுவடை இயந்திரம் – ரூ.75,000/-

கொத்துக்‌ கலப்பை – ரூ.50,000/-

நெல்‌ அறுவடை இயந்திரம் – ரூ.11 இலட்சம்‌

பல்வகைப்‌ பயிர்‌ கதிரடிக்கும்‌ இயந்திரம் – ரூ.2.50 இலட்சம்‌

கரும்பு சோகையை துகளாக்கும்‌ கருவி – ரூ.1.25 இலட்சம்‌

தென்னை ஓலைகளை துகளாக்கும்‌ கருவி – ரூ.63,000/-

வைக்கோல்‌ கட்டும்‌ கருவி – ரூ.2.25 இலட்சம்‌

கரும்பு சோகை உரிக்கும்‌ கருவி – ரூ.75,000/-

புதர்‌ அகற்றும்‌ கருவி – ரூ.30,000/-

தட்டை வெட்டும்‌ கருவி – ரூ.20,000/-

முதற்கட்டமாக, 1615 வேளாண்‌ இயந்திரங்களை மானியத்தில்‌ வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச்‌ சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன்‌, கூடுதலாக 20 சதவிகித மானியம் சேர்த்து மொத்தம் 70% மானியம்‌ வழங்கப்படும்‌. இதனால்‌, இப்பிரிவினைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ செலுத்த வேண்டிய பங்களிப்புத்‌ தொகை வெகுவாக குறையும்‌. இதற்கான மானியம்‌ மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்‌.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்‌..?

இத்திட்டத்தில்‌ பயன்பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ உழவன்‌ செயலி மூலமாகவோ அல்லது http://aed.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்‌. கூடுதல்‌ தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை அலுவலகத்தை அணுகலாம்‌.

தேவைப்படும்‌ ஆவணங்கள்‌:

  • ஆதார்‌ அட்டையின்‌ நகல்‌
  • புகைப்படம்‌ (Passport Size Photo)
  • சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும்‌ அடங்கல்‌
  • ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால்‌, சாதிச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ்‌ நகல்‌

கிராமங்களில்‌ சாகுபடிப்‌ பணிகளுக்கு போதிய வேலையாட்கள்‌ கிடைக்காமல்‌ அவதியுறும்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு, அரசு மேற்கொண்டு வரும்‌ வேளாண்‌ இயந்திரமயமாக்கல்‌ திட்டத்தில்‌ இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர்‌ நலத்‌துறை அமைச்சர்‌ எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ தெரிவித்துள்ளார்‌.

Chella

Next Post

மாணவர்களே இன்றே கடைசி நாள்...! உடனே விண்ணப்பிக்கவும்...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Wed Nov 30 , 2022
தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். மேலும்‌ […]

You May Like