fbpx

விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!! வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு..!! மத்திய அரசு அதிரடி

கிசான் அட்டை விவகாரத்தில் விவசாயிகள் வட்டி மானியத்தை எவ்வித தடையும் இன்றி பெறுவதற்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த அட்டைகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்திவிடும்.

விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!! வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு..!! மத்திய அரசு அதிரடி

இந்த வட்டி மானிய திட்டத்தை தற்போது 2022-23 மற்றும் 2023-24 வரை தொடர்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கடன்களுக்கான வட்டி மானிய விகிதமானது 1.5 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2% ஆக இருந்தது. இந்நிலையில், விவசாயிகள் வட்டி மானியத்தை எவ்வித தடையும் இன்றி பெறுவதற்கு வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும், திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் அட்டையை இணைத்திருப்பது கட்டாயம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Chella

Next Post

’சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லை’..!! புன்னகையுடன் மேக்ஸ்வெல்..!!

Thu Nov 24 , 2022
‘சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு போதிய பணம் யாரிடமும் இல்லை’ என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பை தொடரில் 239 ரன்கள் குவித்து முதலிடத்தை உறுதி செய்த சூர்யக்குமார் யாதவ், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 111 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் 32 வயதான சூர்யகுமார், ஐசிசி டி20 […]
’சூர்யகுமார் யாதவை ஒப்பந்தம் செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லை’..!! புன்னகையுடன் மேக்ஸ்வெல்..!!

You May Like