ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஆனாலும், ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை. நாட்டில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

அதுமட்டுமின்றி ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை 1800-2200-14 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம் வாய்ஸ் மெயில் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 020-71177775 என்ற எண்ணுக்கு ஓய்வூதியத்தாளர்கள் தங்களின் குறைகளை வாய்ஸ் மெயிலாக அனுப்ப முடியும். இந்த சேவையை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.