fbpx

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் சூப்பர் வேலை..!! மாதம் ரூ.67,000 வரை சம்பளம்..!!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR) ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி, ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் சூப்பர் வேலை..!! மாதம் ரூ.67,000 வரை சம்பளம்..!!

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணி டெபுடேசன் மற்றும் நேரடி ஆள்சேர்ப்பு வகையில் நிரப்பப்படவுள்ளது.

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்டைரக்டர் ஜெனரல்
சம்பளம்ரூ.37,400-67,000 + GP ரூ.10,000
வயது வரம்புநேரடி நியமனத்திற்கு 50 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும். டெபுடேசன் பிரிவில் 56 வயது அதிகபட்சமாக இருக்கலாம்.

கல்வித்தகுதி:

டெபுடேசன் பிரிவில் தேர்வு செய்ய குருப் அ பிரிவில் அரசின் பணி புரிந்திருக்க வேண்டும். நேரடி நியமனத்திற்கு சமூக அறிவியல் பிரிவில் Ph.D., பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 ஆண்டு அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகரிக்கும் நிலையில், நேர்காணல் நடத்தப்படலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய: https://nirdpr.org.in/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர் (பயிற்சி), ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை, கோர் – 4B(UG), இந்தியா வசிப்பிட மையம், லோதி ரோடு, புதுடெல்லி – 110003.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 31.12.2022

Chella

Next Post

"ஜல்லிக்கட்டு போட்டி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது" தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்!!!

Mon Dec 5 , 2022
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல இடங்களில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு […]

You May Like