fbpx

சூப்பர் வேலை..!! மாதம் ரூ.60,000 வரை சம்பளம்..!! மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..!!

கோவை மாவட்டம் நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்

  1. மருத்துவ அலுவலர் – (49)

2. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – (49)

3. சுகாதார பணியாளர் – (49)

வயது வரம்பு:

  1. மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் – 45 வயது வரை

2. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 35 வயது வரை

சம்பள விவரம்:

  1. மருத்துவ அலுவலர் – ரூ.60,000

2. சுகாதார பணியாளர் – ரூ.14,000

3. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – ரூ.8,500

கல்வித் தகுதி:

  • மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பச்தாரர்கள், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 2 வருட சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பப் படிவத்தை, கோவை மாவட்ட https://coimbatore.nic.in/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2023 மாலை 5.00 மணி

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351

Chella

Next Post

பல உருட்டுகளை உருட்டி திருமணமான இளம்பெண் கடத்தல்..!! ரூ.2 லட்சத்திற்கு வேறொருவருக்கு திருமணம்..!!

Mon Feb 6 , 2023
திருமணமான பெண்ணை கடத்திச் சென்று ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன் திடீரென்று காணாமல்போனார். கணவர் குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. இதனால், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காணாமல்போன அந்தப் பெண் […]

You May Like