எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஓய்வூதியச் சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து +919022690226 என்ற எண்ணுக்கு HAI என்று வாட்ஸ்அப் செய்தால் போதும், சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யவில்லை எனில் WAREG என டைப் செய்து space விட்டு கணக்கு எண்ணை டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.