சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பி.இ., பிடெக் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. திட்டப்பணி மேலாளர் – II (Project Associate- II)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: ஏதேனும் படிப்பில் பொறியியல் பட்டம் அல்லது எம்சிஏ பட்டம் பெற்றவர்களும், எம்இ/எம்.டெக் பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். (B.E/B.Tech (Any branch) or MCA and M.E/M.Tech (Any branch) or MBA)
மேலும், தகவல் பகுப்பாய்வு துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000/-
2. திட்டப்பணி மேலாளர் – Project Assistant I
காலியிடங்கள்: 4
கல்வித் தகுதி: ஏதேனும் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் அல்லது எம்சிஏ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் (B.E/B.Tech (Any branch) or MCA).
சம்பளம்: ரூ.25,000 முதல் 35,000/- வரை
மேற்கண்ட, பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: The Director, Internal Quality Assurance Cell, CPDE Building 1st Floor, Anna University, Chennai – 600025