fbpx

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

’ஆஸ்டியோபோரோசிஸ்’ என்பது எலும்பு பலவீனமடைந்து உடைதலுக்கு வழிவகுக்கும் நிலை. பொதுவாக இதனை எலும்பு தேய்மானம் என்றும் குறிப்பிடுவர். 50% பெண்களும், 25% ஆண்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்சனையால் அவதிப்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கான தீர்வு டயட் முறை மற்றும் புகை, மது பழக்கத்துடன் தொடர்புடையது என்றாலும், சில பானங்கள் எலும்பு தேய்மானத்தை மேலும் அதிகரிக்கும். அவற்றில் சில முக்கியமானவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

ஆல்கஹால்

அதீத ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பழக்கம் ’ஆஸ்டியோபோரோசிஸ்’ பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. ஒரு வாரத்தில் பெண்கள் 8 கிளாஸ்கள், ஆண்கள் 15 கிளாஸ்கள் வரை மட்டுமே ஆல்கஹால் எடுத்துக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது கால்சியம் குறைபாட்டுக்கு வழிவகுக்கும். இது வைட்டமின் டி உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுத்துக் கொண்டால், அது ஆஸ்டியோபோரோசிஸ் நிலையை மிகவும் மோசமாக்குகிறது. அதிக, ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், மாதவிடாயும் தாமதமாகிறது.

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

சோடா

கஃபைன் மற்றும் சாஃப்ட் ட்ரிங்குகளில் போஸ்போரிக் அமிலம் இருக்கிறது. இவை கால்சியம் சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கு தடையாக அமைந்து எலும்பு தேய்மானத்தை மேலும் மோசமாக்குகிறது. தினசரி சோடா குடிப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம் என்று 2020ஆம் ஆண்டு நியூட்ரியன்ஸ் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

செறிவூட்டப்பட்ட பால்

செறிவூட்டப்படாத பாலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் முழுமையாக கிடைக்காது. இதனால், இயற்கையாகவே நிறைவான சத்துள்ள பாலை குடிப்பது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வராமல் தடுக்கும். அதேசமயம் செயற்கையாக செறிவூட்டப்பட்ட பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும் கலந்திருப்பதால், அவை எலும்பு தேய்மானம் தவிர மற்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

இனிப்பு கலந்த ஜூஸ்

இனிப்புக் கலந்த ஜூஸ் எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், அதிகம் சர்க்கரை சேர்த்துக் கொள்பவர்களுக்கு எலும்பு தேய்மான பிரச்சனை ஏற்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரையை குறைப்பது, சிறுநீர் வழியாக கால்சியம் மற்றும் மக்னீசியம் வெளியேறாமல் தடுக்கிறது.

எலும்பு தேய்மான பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு..!! இந்த ஈஸியான டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

இந்த பானங்களை தவிர்த்து கால்சியம் மற்றும் எலும்புகளை வலுவாக்கக்கூடிய ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தினசரி டயட்டில் எடுத்துக்கொள்வது மூட்டுக்களை உறுதியாக்கும். முறையான உணவுகளுடன் தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதும் எலும்பு தேய்மானத்தில் இருந்து காக்கும். அதேசமயம் சில பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்யும்போது அது மேலும் தேய்மானத்தை அதிகரிக்கிறது. எனவே நிபுணர்களின் அறிவுரைப்படி முறையான பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

இதையும் படிக்க… இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறைய என்ன காரணம்..? ஆய்வு முடிவுகளே இதைத்தான் சொல்கிறது..!

Chella

Next Post

இல்லற வாழ்க்கையில் ஆர்வம் குறைய என்ன காரணம்..? ஆய்வு முடிவுகளே இதைத்தான் சொல்கிறது..!

Sat Oct 8 , 2022
இல்லற வாழ்க்கை குறித்து பொதுவெளியிலோ, நண்பர்கள் இடத்திலோ கலந்தாலோசிப்பது என்றாலே இந்த 21-வது நூற்றாண்டிலும் பலருக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. அதுவும் பெண்களுக்கு நேரும் இல்லறம் சார்ந்த பிரச்சனைகளை பெண்களிடம் பகிர்வதற்கும், அதுகுறித்து பேசி தெளிவு பெறுவதற்கும் இந்திய சமூகத்தில் எப்போதுமே ஒரு வித எதிர்ப்பும் அயர்ச்சியுமே இருக்கும். ஏற்கனவே இருக்கும் உள்ளக் குமுறல்களில் பாலியல் ரீதியான சங்கடங்கள், சந்தேகங்கள் குறித்து கேள்விகளும் இன்னும் மன அழுத்தங்களையே ஏற்படுத்தக் கூடும். இப்படி […]
’பாலியல் உறவை தவிர்ப்பது, மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்கு சமம்’..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

You May Like