ஆதார் கார்டில் ஏதேனும் தவறு நேர்ந்தால்கூட அது உங்களுக்கு சிக்கல்தான். ஆகவே உங்களது பெயர், வயது, பிறந்ததேதி உட்பட அனைத்து விவரங்களும் அதில் சரியாக இருக்க வேண்டும்.
ஆதார் கார்டில் விவரங்கள் சரியாக இருப்பின், இந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய ஆவணங்களையும் பெறலாம். அதே நேரம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழையிருப்பின் அதை உடனடியாக திருத்தம் செய்துக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள உங்களது ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்று மாற்றிக்கொள்ள முடியும். இப்போது கிராமங்களில் இயங்கி வரும் தபால்துறை கூட டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆதார் கார்டில் எவ்வளவு திருத்தம் செய்ய வேண்டுமோ அதை செய்துகொள்ளலாம்.

மேலும், புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று உங்களது ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், நீங்கள் UIDAI தளத்தின் வாயிலாகவும் மாற்றிக்கொள்ளலாம். UIDAIன் உதவியுடன் பெயர், முகவரி, மொபைல் எண், புகைப்படம் மற்றும் மின் அஞ்சல் ஐடி குறித்த தகவல்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களது ஆதார் கார்டில் தற்போதுள்ள படம் பிடிக்கவில்லை எனில், நீங்கள் புதியதாக எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படத்தை ஆதார் அட்டையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.