இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மெலிவுடன் காணப்படுவதற்கு காரணம், சரியான உணவு முறை இல்லாதது தான். அதற்காக பெற்றோரையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில், குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை முன்னேற்றி கொண்டு செல்ல முடியும். அதற்காக குழந்தைகளை கவனிக்காமல் விட முடியுமா? எனவே, உங்கள் குழந்தைகளுக்கு இந்த இரண்டு உணவுகளை கொடுத்துப் பாருங்கள் மல மலவென எடை கூடும்.

தேங்காய் பால்
தேங்காய் பாலில் அதிக புரதச்சத்துகளும் கொழுப்புச் சத்துக்களும் உள்ளன. அதற்காக கொலஸ்ட்ரால் போன்ற வியாதிகள் வரும் என்று கவலைப்பட வேண்டாம். தேங்காய்ப்பால் ஆனது சூடு படுத்தும் போது மட்டுமே கொழுப்பு சத்து மிகுந்து இதுபோன்ற பிரச்சனைகள் வரும். தேங்காய் பாலாக பருகும் போது உடல் எடையை கூட்டுவதற்கு நல்ல கொழுப்பு சத்துக்கள் மட்டுமே அதில் நிறைந்திருக்கும். அதனால், இரவு நேரங்களில் ஒரு சிறிய டம்ளர் அளவில் தேங்காய் பால் தூங்குவதற்கு முன்பு சிறிதளவு கரும்பு சர்க்கரையோ நாட்டுச்சர்க்கரையோ கலந்து கொடுத்து பாருங்கள் உடல் எடை நன்றாக பெருகும்.
செவ்வாழைப்பழம்
அனைத்து வகையான சத்துகளும் நிறைந்து இருக்கக்கூடிய பழம்தான் செவ்வாழை. இதை காலையில் குழந்தைகளுக்கு டீ, காபி போன்றவற்றை கொடுப்பதற்கு பதிலாக தினம் ஒரு பழம் கொடுத்து வந்தால், உடல் எடை பெருகும்.