உலகில் பல வகையான வித்தியாசமான பழக்கவழக்கங்களும், பழைய மரபுகள் இன்று வரை மக்களால் பின்பற்றப்படுகின்றன. அத்தகைய பாரம்பரியத்தைப் பற்றிய தகவல்களை இன்று பார்க்கலாம்.. மணமகள் மீது எச்சில் துப்பியபடி அவரை வழியனுப்புகின்றனர்..

கென்யா மற்றும் தான்சானியாவில் வசிக்கும் மசாய் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான மரபை பின்பற்றுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்து விடைபெறும் நேரத்தில், மணமகளின் தலையிலும் மார்பகத்திலும் அவரின் தந்தை எச்சில் துப்புவாராம்.. இது தந்தையிடமிருந்து மகளுக்கு கிடைத்த வரமாக கருதப்படுகிறது. இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக இந்த பழங்குடியினரில் பின்பற்றப்படுகிறது.
மசாய் பழங்குடியினரில், இந்த பாரம்பரியம் தந்தையின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கருதப்படுகிறது. மகளும் பிரியாவிடையின் போது தந்தை எச்சில் துப்புவதை பாக்கியமாக கருதுகிறார். இந்த பழங்குடியினரில், திருமணத்திற்குப் பிறகு மணமகளின் தலை மொட்டையடிக்கப்படுகிறது..