fbpx

இன்று வரை தொடரும் மர்மம்.. இந்த தீவுக்கு செல்லும் விமானங்கள் மறைந்துவிடுமாம்..

பூமியில் பல மர்மமான இடங்கள் உள்ளன. அவற்றின் மர்மங்கள் இன்று வரை தீர்க்கப்படாமல் புரியாத புதிராகவே உள்ளன.. விஞ்ஞானிகளால் கூட அந்த மர்மங்களுக்கான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை.. அதுபோன்ற மர்ம இடங்களில் ஒன்று தான் ஒன்று அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு. இதுகுறித்து தான் இன்று பார்க்கப் போகிறோம்..

பல்மைரா என்ற இந்த தீவு நீண்ட காலமாக சபிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வர முடியாது என்றும் நம்பப்படுகிறது. இந்த தீவு தொடர்பான பல திகிலூட்டும் சம்பவங்கள் உள்ளன.. அமெரிக்காவின் சமோ நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தீவில் நிரந்தர குடியிருப்பாளர்கள் என யாரும் வசிக்கவில்லை.

1798 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை, இந்த தீவில் பல விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த அமெரிக்கத் தீவின் மீது பறக்கும் விமானங்கள் மர்மமான முறையில் மறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதே போல் அங்கு செல்லும் கப்பல்களும் மறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.. இன்றுவரை, இதற்கு பின்னணியில் உள்ள மர்மம் குறித்து யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை..

துணிச்சலான மக்கள் சிலர் இந்த தீவுக்குச் சென்று திரும்பியிருந்தாலும். இந்த மர்மமான தீவில் மிகவும் விசித்திரமான சம்பவங்கள் நடந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.. ஒரு சிலர் இந்த தீவில் பேய்கள் இருப்பதாகவும், இங்கு செல்பவர்களை அவை அச்சுறுத்துவதாகவும் தெரிவிக்கின்ற்னார்.. இந்த காரணத்திற்காக, யாரும் இந்த தீவுக்கு செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது..

Maha

Next Post

அரசு போக்குவரத்துத் துறையில் இவர்களுக்கே முன்னுரிமை.. புதிய தகவல்..

Thu Sep 8 , 2022
ஒரே சமயத்தில் ஓட்டுநர், நடத்துனர் என இரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய நபர்களுக்கு முக்கியத்துவம் வழங்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.. தமிழக போக்குவரத்துத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், விரைவில் பணி ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.. இதுபோன்ற காரணங்களினால் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனிடையே தமிழக அரசின் பொதுத்துறை […]
தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

You May Like