fbpx

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை..!! செலவுகளை எப்படி குறைப்பது..? பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!!

குழந்தைகள் சிறியவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான செலவுகளோ பெரியதாகவே இருக்கிறது. ஆரோக்கியமான முறையில் வளர்ப்பது தொடங்கி, அவர்களுக்கு தேவையான ஆடைகள், சுகாதாரப் பொருட்கள் என செலவுகள் அணிவகுத்து நிற்கும். அதே சமயம், குழந்தைகளுக்கான செலவுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், செலவுகளை திட்டமிட்டு செய்தால் கொஞ்சம் பணத்தை சேமிக்கலாம். அதற்கு கீழ்காணும் யோசனைகள் உதவிகரமாக இருக்கும்.

முன்கூட்டியே பட்ஜெட் ஒதுக்கவும் : 

கர்ப்ப காலத்தின்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் சமயத்திலேயே, அடுத்து பிரசவத்திற்கு எவ்வளவு செலவாகும், அதைத்தொடர்ந்து என்னென்ன செலவுகள் இருக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்து அதற்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும். ஆடைகள், மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்படும் செலவுகளை கவனிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தேவையானதை மட்டும் வாங்கவும் : 

குழந்தை பிறந்தவுடன் அவர்களுக்காக ஆடைகளை வாங்குவதற்கு நீங்கள் கடைக்குச் செல்லும்போது, பார்க்கும் ஒவ்வொன்றும் உங்கள் குழந்தைக்கு பொருத்தமானதாக தோன்றும். ஒன்றன் பின் ஒன்றாக நிறைய ஆடைகளை வாங்க தோன்றும். ஆனால், உங்கள் குட்டிக் குழந்தை வளர்ந்து கொண்டே போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, தேவையான ஆடைகளை மட்டும் வாங்கிக் கொள்ளவும்.

லாயல்டி பாயிண்ட்ஸ் : 

நீங்கள் எந்தபொருள் வாங்கினாலும் டிஸ்கவுண்ட், லாயல்டி பாயிண்ட்ஸ், கேஷ்பேக், ரிவார்ட் பாயிண்ட்ஸ் போன்ற சலுகைகள் வழங்குகின்ற கடைகளை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பண்டிகைக்கால ஆஃபர்கள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாளுக்காக வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டுகளில் பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

அவசர நிதி சேமிப்பு : 

குழந்தைகளுக்கு எப்போது உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று தெரியாது. அதேபோல வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, முன்கூட்டியே பணத்தை இதற்கென ஒதுக்கி வைக்க வேண்டும். வேறு எந்த காரணத்திற்காகவும் இந்தப் பணத்தில் கை வைக்க கூடாது என்று உறுதியுடன் இருக்க வேண்டும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல : 

சூப்பர் மார்க்கெட் சென்றால் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் தளம் சென்றால், குழந்தைகளுக்கு என்று நிறைய பொருள்கள் இருக்கும். ஒவ்வொன்றுமே நமக்கு தேவைப்படும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், வாங்கிய பின் பல பொருட்கள் பயன்படாமல் போகும். ஆகவே, நன்றாக யோசித்து தேவையானவற்றை மட்டும் வாங்க வேண்டும்.

உறவினர்கள் பரிசு :

குழந்தைகளுக்காக தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நெருங்கிய உறவினர்களும், உங்கள் நண்பர்களும் கொடுக்கின்ற பரிசுப் பொருட்களை சேமித்து வைத்து தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல அவர்கள் கொடுக்கும் பணத்தையும் குழந்தைகளின் நலனுக்காக மட்டும் செலவிடவும்.

Chella

Next Post

போக்குவரத்து போலீசாரிடம் வசமாக சிக்கிய திண்டுக்கல் லியோனி..!! ட்விட்டரில் போட்டுக்கொடுத்த பயனர்..!!

Tue May 23 , 2023
சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதளங்கள் மூலம் அதிகளவில் சாலை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் […]
போக்குவரத்து போலீசாரிடம் வசமாக சிக்கிய திண்டுக்கல் லியோனி..!! ட்விட்டரில் போட்டுக்கொடுத்த பயனர்..!!

You May Like