பல பெண்களுக்கு ஆண்களைப் போலவே முகத்தில் முடி அதிகம் இருக்கும். இதனால் பல பெண்கள் வெளியே செல்வதற்கு கூட அஞ்சுவது உண்டு. ஒரு சிலர் ஆண்களைப் போலவே ஷேவ் செய்வது உண்டு.. இல்லையென்றால் விளம்பரங்களில் வரும் ஒரு சில கிரீம்களில் பயன்படுத்தி முடியை அகற்றுவார்கள். ஆனால் இது போன்ற செயல்களால் எந்த பயனும் இல்லை.
என்னென்றால், இது போன்ற முடி வளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது. இந்த நிலையை மருத்துவ ரீதியாக ஹிர்சுட்டிசம் என்று குறிப்பிடுவார்கள். PCOS பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். மேலும் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் சரியான தூக்கம் இல்லாதது போன்ற காரணங்களாலும் முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கும்.
இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், நாம் உணவு மற்றும் வாழ்க்கை முறையை தான் மாற்ற வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதாலும், ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலமும், நாம் பெண்களின் ஹார்மோனை சமநிலைப் படுத்தலாம். ஹார்மோன் சமநிலையில் இருக்கும் போது, முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.
இதற்கு துளசி பெரிதும் உதவும். ஏனென்றால், துளசி உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், ஆளிவிதைகளில் லிக்னான்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அதிகம் உள்ளது. இவை இரண்டும் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதேபோல, பாதாம் பருப்பு ஹார்மோன் ஒழுங்குமுறை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும், கீரைகள் கல்லீரலை சுத்தம் செய்து ஹார்மோனை சமநிலை படுத்துகிறது. இதனால் இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் முகத்தில் முடி வளரவே வளராது..
Read more: இந்த ஒரு பொருளை தேனுடன் கலந்து சாப்பிடுங்க… கொத்து கொத்தாக கொட்டும் முடி, காடு மாதிரி வளரும்..