fbpx

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி…

தருமபுரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்த்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் வேலை தேடுபவர்கள் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2 ஏ, 2022 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://cutt.ly/MMrrs1T என்ற படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப் – 2-ஏ 2002 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Next Post

வளர்ப்பு குழந்தைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம்… கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!

Tue Nov 22 , 2022
பெற்ற குழந்தைகளுக்கு இருக்கும் அதே உரிமை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உண்டு எனவும் வளர்ப்பு பிள்ளைகளும் பெற்றோரின் வேலையை பெறலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசுப் பணியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்துவிட்டால், அந்த நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அந்த வேலை இறந்தவரின மகனுக்கோ, மகளுக்கோ வழங்கப்படும். ஆனால், ஒருவேளை இறந்தவருக்கு வளர்ப்பு பிள்ளைகள் இருந்தால் இந்த வேலை […]

You May Like