டிஎன்பிஎஸ்சி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது அப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

பணியின் முழு விவரங்கள்…
பணியின் பெயர் | தமிழ்நாடு கல்விப் பணிகள் |
பதவியின் பெயர் | நிதியாளர் |
காலியிடங்கள் | 5 |
சம்பளம் | ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை |
வயது வரம்பு:
SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 32-க்குள் இருக்க வேண்டும்.
நிதியாளர் பணிக்கான கல்வித் தகுதி:
பொது நிர்வாகத்தில் முதுகலை (M.A.Public Administration) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அ) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேரடி ஆட்சேர்ப்பு படி கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படும்.
இட ஒதுக்கீடு :
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரகாரம் பணி நியமனம் வழங்கப்படும். பி.வ (பொது) – 1, பி.வ(பெ) – 1, பி.வ (மு) (பொது)- 1, மி.பி.வ -1, ஆ.தி (பொது)-1 என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கணினி வழி தேர்வு:
இப்பணிகளுக்குத் தேர்வு கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி இப்பணிகளுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் காலை மாலை என்று இரண்டு தாள்கள் எழுத வேண்டும். முதல் தாள் முதுகலை தரத்தில் அமையும். பொது நிர்வாகம் அல்லது வியாபார நிர்வாகம் ஆகிய பாடங்கள் இடம்பெறும். 300 மதிப்பெண்கள் கொண்ட இந்த தாளுக்கு 3 மணி நேரம் தேர்வு எழுத வழங்கப்படும். அதே போல் இரண்டாம் தாளுக்கு 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்படும்.
இரண்டாம் தாள் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். பகுதி – அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு. இதில் 150 மதிப்பெண்களில் 60 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பகுதி – ஆ இல் பொது அறிவு மற்றும் திறனாய்வு கேள்விகள் இடம்பெறும். இவை 10 ஆம் வகுப்பு தரத்தில் அமையும்.
தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையான கட்ஆஃப் :
முதல் தாள் 300 மதிப்பெண்கள், இரண்டாம் தாள் 300 மதிப்பெண்கள் நேர்முகத் தேர்வு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 510 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். இதில் ஆ.தி, ஆதி (அ), ப.ப, மி.பி.வ, சீ.ம, பி.வ, மற்றும் பி.வ.மு பிரிவினருக்கு 153 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற கட்ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 204 மதிப்பெண்கள் கட்ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்:
பதிவு கட்டணம் – ரூ .150/-
தேர்வு கட்டணம்- ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: https://apply.tnpscexams.in/
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் | 11.11.2022 |
விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 10.12.2022 |
விண்ணப்பம் திருத்தம் செய்ய இயலும் நாள் | 15.12.2022 – 17.12.2022 |
இணையத்தில் ஆவணங்கள் மாற்றம் / பதிவேற்றம் செய்யக் கடைசி நாள் | 26.02.2023 |