fbpx

நீங்கள் செய்த உணவு கருகி போய்விட்டதா?? இதை மட்டும் செய்தால் போதும்..

பரபரப்பான காலை நேரங்களில், நாம் சமைக்கும் உணவு கருகி போவது இயல்பான ஒன்று தான். ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்யும் போது, இப்படி நடக்கத்தான் செய்யும். ஆனால் பலருக்கு இது புரியாது. இதனால், குடும்பத்தில் பல்வேறு சண்டைகள் ஏற்படும். இந்த சண்டைக்கு முக்கிய காரணம், கருகி போன உணவுகளை நமக்கு சரி செய்ய தெரிவதில்லை. இனி நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் செய்த உணவு கருகி போனால், இனி அதை எளிமையாக சரி செய்துவிடலாம். கருகிய உணவை எப்படி எளிமையாக சரி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

சமையல் பாத்திரத்தை மாற்றவும்: பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டும் தீஞ்சு போய் இருந்தால், பாத்திரத்தை உடனே மாற்றி விடுங்கள்.. இதனால் தீஞ்சு போன வாடை வராது.

அமிலப் பொருட்களைச் சேர்க்கவும்: உணவு சிறிது கருகி போய் இருந்தால், உங்கள் ரெசிபிக்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறு, வினிகர், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின் அல்லது தக்காளி போன்றவற்றை சேர்க்கலாம்.

உருளைக்கிழங்கு பயன்படுத்தவும்: கருகி போன எந்த உணவையும் சரி செய்ய பயன்படுவது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, உணவு கொதித்த பாத்திரத்தில் சேர்த்து, சிறிது நேரத்தில் அகற்றவும். இப்போது உணவின் தீஞ்ச வாசனை மறைந்து விடும்.

Maha

Next Post

தாலியை நெஞ்சுகுழியில் படும்படி தான் அணிய வேண்டும்.., ஏன் தெரியுமா??

Tue Oct 3 , 2023
பெண்களுக்கு உள்ள பெரும் ஆசைகளில் ஒன்று தங்கம். தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் பெண்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள். பெண்கள் தங்கம் அணிவதை பெருமையாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால், பல பெண்களுக்கு தங்கம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவதில்லை. ஆம், இயற்கையாகவே தங்கத்திற்கு வசீகர தன்மையும் உறுதித்தன்மையும் அதிகம். ஒவ்வொரு உலோகமும் நமது உடம்பில் உரசும் போது ஒரு வித நற்பயனைத் தருகின்றன. அதே போன்று தான் […]

You May Like