’ஒரு ஜீன்ஸ் பேண்டை துவைக்காமல் 10 முறை பயன்படுத்துங்கள் அதற்கு பின்னர் துர்நாற்றம் வீசினால் மட்டும் துவைங்க ’என்று டெர்பி ஜீன்ஸ் பேண்ட் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பிரபலமான டெர்பி என்ற ஜீன்ஸ் கம்பெனி நடத்தி வருபவர் விஜய் கபூர். இவர் நாம் அணியும் ஜீன்ஸ் வகை உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எப்பொழுது துவைத்தால்போதுமானது என்ற தகவலை பகிர்ந்துள்ளார். ஒரு ஜீன்ஸ்பேண்டை குறைந்தது 10முறையாவது போட வேண்டும் என்கின்றார்.
பத்து தடவையா ? அரிக்குமே .. என கேள்வி எழலாம் ? அதற்கும் விளக்கம்அளித்துள்ளார் விஜய் கபூர். ஒரு ஜீன்சை ஒரு முறை போட்ட பின்னர் அதை உள்பக்கமாக திருப்பி வெயிலில் காய வைக்க வேண்டும். அடுத்த நாள் வேறு ஜீன்சை அணிந்து கொள்ளலாம். நன்றாக வெயிலில் காய்ந்த ஜீன்ஸ் துணியில் லேசான துர்நாற்றம் அல்லது வியர்வை இன்ஃபெக்ஷன் போன்றவை இருந்தால் அது போய்விடும். பின்னர் அதை பீரோவில் வைத்துவிட வேண்டும். இவ்வாறாக செய்யும்போது எந்த பிரச்சனையும் ஏற்படாது..
மேலும் ஜீன்ஸ் துணியை துவைப்பதற்கென ஒருவிதிமுறை உள்ளது. 10 முறைக்கு மேல் ஜீன்ஸ் போட்ட பின்னர் ஒரு வேளை அழுக்கு இருந்தால் அந்த இடத்தில்மட்டும் டிரை கிளீன் செய்து கொள்ளலாம். இப்படி செய்தால்நீண்ட நாட்களுக்கு அதன் நிறம் மாறாமல் உழைக்கும். ஒரு வேளை துவைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் துணியை உள்பக்கம் திருப்பி துவைத்து நன்றாக உலர்த்திவிட வேண்டும். என்கின்றார் விஜய் கபூர்.