கணையப் புற்றுநோயை கண்டறியும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
உலகிலேயே இந்தியா கணையப் புற்றுநோய் பாதிப்பினால் இறந்தவர்களின் விகிதத்தில் 7வது இடத்திலும், நோயால் பாதிக்கப்பட்டதில் 14வது இடத்திலும் உள்ளது என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் அஃப் மெடிக்கல் சயின்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களில் 10 ஆயிரம் பேரில் 24 பேருக்கு கணையப் புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது. ஆனால் சிகிச்சையின்றி இறப்பவர்கள் எண்ணிக்கை 18 ஆக இருக்கிறது. இந்த கணையப் புற்றுநோய் உண்டாவதற்கு அதிகமாக அசைவ உணவுகள் எடுத்துக் கொள்வது, புகைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன. அதேபோல இந்த கணையப் புற்றுநோயிலும் மற்ற புற்றுநோய்களைப் போல 4 நிலைகள் இருக்கின்றன.
எடை இழப்பு : நீரிழிவு, கடும் தொற்றுக்கள் ஆகியவற்றின் காரணமாக திடீர் எடை இழப்பு உண்டாகலாம். ஆனால் அதைப் போலவே புற்றுநோய் பாதிப்பாலும் எடை இழப்பு அதிகமாக இருக்கும்.குறிப்பாக கணையப் புற்றுநோய் ஏற்படும்போது காரணமே இல்லாமல் அதிகமாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
அஜீரண கோளாறு :கணையப் புற்றுநோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் ஜீரண மண்டல பிரச்சனைகளும் ஏற்படும்.வாந்தி,குமட்டல் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.குறிப்பாக மலம் கழிப்பதில் சிரமம், மலச்சிக்கல்போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
சரும அரிப்பு :சருமத்தி்ல் எரிச்சல், அரிப்பு ஆகியலை ஏற்படுவது வெறும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. அது உடலின் உள்ளே இருக்கும் சில உறுப்புகளின் பாதிப்புகளாலும் உண்டாகும். கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் கல்லீரல் மற்றும் கணையப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு சரும அரிப்பு, சிவந்து போதல் மற்றும் எரிச்சல் அதிகமாக ஏற்படும்.
அதிக உடல் சோர்வு :புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளில் ஒன்று உடல் சோர்வு. எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் கூட, எப்போதுமே உடல் சோர்வாக இருப்பது போன்றே உணர்வார்கள். அதிலும் கணையப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு இன்சுலின் உற்பத்தியிலும் தாக்கம் ஏற்படுவதால் மோசமான உடல் சோர்வை அனுபவிப்பார்கள்.
பசியின்மை:பசியின்மை புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறி என்றாலும் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். கணையத்தின் செயல்பாடும் குறையத் தொடங்கிவிடும். இன்சுலின் சகிப்புத் தன்மை ஆகிய பிரச்சினை ஏற்படும். இதனால் பசியின்மை பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.
கடும் வயிற்று வலி :கணையப் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் கமையான வயிற்று வலி இருக்கும்.கணையப் புற்றுநோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிவயிற்றின் மேல்பகுதியி்ல் கடுமையான வலியை உணர்வார்கள்.
சிறுநீரின் நிறத்தில் மற்றம் :சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்களுக்கு சிறுநீரில் மிகப்பெரிய மாற்றங்கள் தெரியும்.ஆனால் கணையப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். சிறுநீர் அடர் நிறங்களில் வெளியாகும். குறிப்பாக அடர் மஞ்சள் மற்றும் பிரௌன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
நீரிழிவு :கணையப் புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாக நீரிழிவைக் குறிப்பிடலாம். கணையப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு போதிய அளவு இன்சுலின் சுரப்பு இல்லாததால் நீரிழிவு பிரச்சினை உண்டாகிறது. நீரிழிவுடன் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முழுமையாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.