அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. அதிலும் செவ்வாழை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு ஊட்ட சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி, பகல் 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்காது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
ஆண்மை குறைபாடு: மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது இது ஆண்மை குறைப்பாட்டிற்கு தீர்வளிகிறது.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும்.எனவே இவர்கள் தினசரி இரவில் சாப்பாட்டுக்கு பின்னர் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
கண் பார்வை குறைபாடு :கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக இருக்கும். குறிப்பாக மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பல் பிரச்சனை: பல்வலி, பல்லசைவு, போன்ற பல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.