fbpx

’புதிதாக என்ன தொழில் செய்யலாம்..? சூப்பர் டிப்ஸ்..!! உடனே இதை பண்ணுங்க..!!

சுயமாக புதிய தொழில் எப்படி தொடங்குவது என்பது குறித்த விழிப்புணர்வு முகாமினை தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute) வரும் 9ஆம் தேதி நடத்த இருக்கிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

’புதிதாக என்ன தொழில் செய்யலாம்..? சூப்பர் டிப்ஸ்..!! உடனே இதை பண்ணுங்க..!!

யார் கலந்து கொள்ளலாம்: தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

முகாம் நடைபெறும் நாள்: சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் வரும் 9ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

இது, முதற்கட்ட பயிற்சியாகும். சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி இந்த முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்தக்கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார். அடுத்தக்கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

’புதிதாக என்ன தொழில் செய்யலாம்..? சூப்பர் டிப்ஸ்..!! உடனே இதை பண்ணுங்க..!!

மேலும், மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியில் இருந்து தற்போதைய விண்ணப்பதாரர்கள் விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு வளாகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்: 044-22252081/82/83
04422252085. மையத்தின் மின்னஞ்சல் முகவரி: asstd@editn.in | admin@editn.in ஆகும்.

Chella

Next Post

பெரும் சோகம்...! சித்ராங் சூறாவளி புயலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு...!

Sun Nov 6 , 2022
சித்ராங் சூறாவளி புயலால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தை தாக்கிய வெப்பமண்டல புயலான சித்ராங் சூறாவளி புயலால் இதுவரை குறைந்தது 13 உயிரிழந்துள்ளனர். இதில் குறைந்தது 8 பேர் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள் விழுந்த பின்னர் உயிரிழந்தனர், இருப்பினும் மற்றவர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்கள் அல்லது நீரில் மூழ்கி இறந்தனர். அசாமின் நாகோன் மாவட்டத்தில் கனமழை மற்றும் புயலை ஏற்படுத்திய சித்ராங் சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன. திங்கள்கிழமை […]

You May Like