fbpx

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகமான எண்ணிக்கையில் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1,000-க்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இப்படியான, முக்கிய ஆவணமான ரேஷன் கார்டுகளை அனைத்து குடும்பத்திலும் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைப்பர்.

ஒருவேளை ரேஷன் கார்டு தொலைந்து போனாலும் கவலை வேண்டாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, உங்களது ஐடி-யை பதிவு செய்ய வேண்டும். அப்போது, உங்கள் செல்போனுக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்து TNPDS பக்கத்தில் நுழைந்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து சமர்ப்பித்தால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ஒருவேளை விண்ணப்பிப்பது கடினமாக இருந்தால், அரசின் அனைத்து இ-சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் தாங்களாகவே விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. ஆனால், இ-சேவை அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்தால் எவ்வித சிரமும், அலைச்சலும் இல்லாமல் ரேஷன் கார்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அரசு இ-சேவை மையங்களில் ரூ.60 வசூலிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் பொது சேவை மையங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும். விண்ணப்பித்த இரண்டு மாதங்களில் ரேஷன் கார்டு கிடைத்து விடும். தாலுகா அலுவலகத்திற்கு ரேஷன் கார்டு அனுப்பப்படும். அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் ரேஷன் கார்டை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து தகவல்களும் எஸ்.எம்.எஸ். மூலமாக வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.

Read More : அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்வா..? வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு..!!

English Summary

Don’t worry if you lose your ration card. You can apply online and get new ration cards.

Chella

Next Post

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை IIT...!

Tue Aug 13 , 2024
IIT Madras Sweeps Top Positions in NIRF Rankings

You May Like