fbpx

Whatsapp Update..!! வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! வந்தாச்சு புதிய அப்டேட்..!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனமும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட எடிட் சாட் வசதி சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலமாக நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்து கொள்ள முடியும்.

அதனைப் போலவே தற்போது 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு சாட் புதிய இடை முகத்தை (Interface) உருவாக்குகிறது. அதில் சுயவிவரம், தனி உரிமை மற்றும் தொடர்புகள் என்ற 3 புதிய ஷார்ட்கட் அமைப்புகள் இருக்கும். அதன் மூலமாக பயணங்கள் எளிதாக செட்டிங்ஸ் அமைப்பிற்கு செல்லலாம். இதனால் இந்த புதிய அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. இந்த அம்சம் மூலம் போனின் வாட்ஸ் அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல், மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் பயனர்கள் ஷேர் செய்துக் கொள்ள முடியும்.

Chella

Next Post

சாதனை படைத்த சிஎஸ்கே..!! இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்..!! - ஜடேஜா

Tue May 30 , 2023
சிஎஸ்கே வெற்றியை எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை வசப்படுத்தினார். இதன் மூலம் சிஎஸ்கேயின் எதிர்காலம் நான்தான் என்பதை தனது பேட்டிங் மூலம் அனைவருக்கும் புரிய வைத்தார் […]
சாதனை படைத்த சிஎஸ்கே..!! இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்..!! - ஜடேஜா

You May Like