செவ்வாய்கிழமை என்பது முருகப் பெருமானின் பக்தர்களுக்கு ஒரு முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதங்கள், வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை தரக் கூடியவை. வாழ்க்கையில் தோன்றும் சிக்கல்களை நீக்கும் சக்தியுள்ள நாளாகவும் இது விரிவாக பேசப்படுகிறது. குறிப்பாக, துர்க்கை மற்றும் பைரவரை வணங்குவதற்கும் இந்த நாள் மிகவும் சிறந்ததாக பரிகணிக்கப்படுகிறது.
நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் பகவானுக்கு உயரிய நாளாக செவ்வாய்கிழமை உள்ளது. ‘கிழமை’ என்பது ‘உரிமை’ என்ற அர்த்தத்தைக் கொண்டதாகும். செவ்வாய்ப் பகவானின் உரிமையில் உள்ள நாளாக இருப்பதால்தான், அந்த நாளை ‘செவ்வாய்கிழமை’ என்று அழைக்கப்படுகிறது. முருகனுக்குரிய மூன்று முக்கிய விரதங்களில் (திதி, நட்சத்திரம், கிழமை) அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விரதம், சுலபமாகவும், விரைவாகவும் பலன் தரக்கூடியதாகும். இது மற்ற விரதங்களைப் போல் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
செவ்வாய்ப் பகவான் வீடு, நிலம், வாகனம், உடல்நலம் போன்றவற்றின் காரணகர்த்தாவாகவும் கருதப்படுகிறார். அவருடைய கிரகத் தத்துவம், மனித உடலில் ரத்தம், சுரப்பிகள், கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புடையது. “அங்காரகன்” என்றும் “குமாரன்” என்ற திருநாமத்தாலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகனை வழிபடுவதால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். குறிப்பாக காலை 6 முதல் 7 மணி வரை சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வேண்டுதல்களுடன் வழிபடும்போது, அதற்கான பலன்கள் விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறை:
காலை எழுந்தவுடன் குளித்து, பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பின்னர் உலோகத்தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து, ஆறு வெற்றிலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றிலைகளின் காம்பு பகுதியை அகற்றிவிட்டு, ஒவ்வொன்றிலும் மஞ்சள், குங்குமம் தொட்டு வைக்க வேண்டும்.
வெற்றிலைகளை விசிறிபோல் பரப்பி, நடுவே அகல் விளக்கை வைத்து, நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
முருகனை மனதார நினைத்து, வேண்டுதலை தெரிவித்துப் பூஜை செய்ய வேண்டும்.
இந்த விளக்கு குறைந்தது 30 நிமிடங்கள் எரிய வேண்டும்.
மேலும், வீட்டு பூஜை அறையில் சட்கோண கோலம் இட்டுப் பிறகு ஆறு நெய் விளக்குகளை ஏற்றி வழிபடலாம். இதனால் முருகனின் ஆறுமுகங்களும் அருள்புரியும் என நம்பப்படுகிறது. நைவேத்தியமாக சர்க்கரை கலந்த பால் அல்லது இரண்டு வாழைப்பழங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வழிபாட்டில் ஏதேனும் ஒரு முறைமையைத் தொடர்ந்து 6 வாரங்கள் செய்யும் போது, உங்கள் வேண்டுதல்களுக்கு தெளிவான பதில்கள் கிடைக்கும்.
Read More: உங்கள் கனவில் ராமர் வருகிறாரா..? கடவுள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
ராகு கேது பிடியில் இருந்து மீள செய்யும் காளஹஸ்தி கோயில்.. எங்க இருக்கு தெரியுமா..?