fbpx

பொது வைப்பு நிதி , தேசிய ஓய்வூதியதிட்டத்தில் எது சிறந்தது?

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். அதே சமயம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் , அது நீண்ட கால முதலீடாக மாறுகின்றது.

பொதுவாக, பி.பி.எப். முற்றிலும் ஆபத்து இல்லாத முதலீட்டாகும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் ஆபத்து இல்லாதது அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் குறைவாக எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்ய பிபிஎஃப் சிறந்ததாகும்.
அதேநேரம் ரிஸ்ட் அதிகமாகவும் ரிட்டன் அதிகம் வேண்டும் என்றும் நினைத்தால் என்பிஎஸ் சிறந்த திட்டமாகும். ஏனெனில் சந்தைக்கு ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப முதலீட்டாளர்களின் நிதி இருக்கும்.
மேலும் என்பிஎஸ்ஸில் 12 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஒரு நீண்ட கால முதலீட்டு கருவியாகும். இதில் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் அதிகப்பட்சமாக ஒரு நிதியாண்டுக்குள் ரூ.150000 லட்சம் வரை சேமிக்கலாம். இந்தத் திட்டத்தில் சில வரையறைகள் உள்ளன.
நிதி அமைச்சகம் வெளியிடும் அறிவிப்புக்கு ஏற்பட வட்டி வீதத்தில் மாற்றம் ஏற்படும். எனினும் இது நிலையான முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீட்டாளர் இந்திய குடியுரிமையை இழக்கும்போது, அவரது திட்டமும் காலாவதி ஆகும்.
மேலும் திட்டத்தில் முதலீடு செய்யவில்லையெனில் ரூ.50 அபராதம் விதிக்கப்படும். வட்டிம் வரி விலக்கு அளிக்கப்படும். அந்த வகையில் வரி விலக்கை விரும்பும் நபர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள். என்பிஎஸ் நீண்ட காலமும் முதலீடு செய்யலாம். அல்லது குறுகிய கால முதலீடாகவும் தொடரலாம். இதில் சந்தைக்கு ஏற்பட லாபம் கணக்கிடப்படும்.
எனினும் அதீத ரிஸ்க் உள்ள திட்டம் இது கிடையாது. ஏனெனில் முழு பணமும் சந்தையில் முதலீடு செய்யப்படுவதில்லை.

Next Post

கூட்டு பலாத்கார நாடகம் ... காசியாபாத் பெண்ணை கைது செய்தது போலீஸ்

Sun Oct 23 , 2022
டெல்லியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டுபலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அது ஒரு நாடகம் என உறுதியாகி உள்ளது. டெல்லியில் 36 வயதான பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்திற்கு சென்றபோதுஅவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டதாகவும், சாக்கு மூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்டதாகவும் தகவல் […]

You May Like