fbpx

எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்..? டாப் 10 லிஸ்ட் இதோ..! இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஸ்கூட்டர் வாகனங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா (Activa) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,21,143 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத விற்பனையை விட ஏறக்குறைய 16,500 யூனிட்கள், அதாவது 8% அதிகமாகும். ஏனெனில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 2,04,659 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஸ்கூட்டரை வாங்க நினைக்கும் பலரது முதன்மையான தேர்வாக ஆக்டிவா உள்ளது.

எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்..? டாப் 10 லிஸ்ட் இதோ..! இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!

கடந்த மாதம் ஆக்டிவா 2,21,143 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு அடுத்துபடியாக டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் (Jupiter) உள்ளது. ஜூபிட்டரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 70,075 ஆகும். அதாவது ஆக்டிவா மற்றும் ஜூபிட்டருக்கு இடையே கிட்டத்தட்ட 1.5 லட்சம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளது. ஆனால் உண்மையில், 2021 ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜூபிட்டரின் விற்பனை சுமார் 53.5% அதிகரித்துள்ளது.

எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்..? டாப் 10 லிஸ்ட் இதோ..! இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 45,625 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களையே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. அந்த மாதத்தில் ஜூபிட்டரை முந்திக்கொண்டு, 2வது இடத்தை பிடித்திருந்த சுஸுகி ஆக்ஸஸ் இம்முறை 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் 49,135 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 40,375 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களையே சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது, ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனையானது வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 17.8% குறைந்துள்ளது. 4-வது இடத்தில் மற்றுமொரு ஹோண்டா ஸ்கூட்டராக டியோ 29,714 யூனிட்களின் விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 26,897 டியோ ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்..? டாப் 10 லிஸ்ட் இதோ..! இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!

இதேபோல் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஏறக்குறைய 26 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த டிவிஎஸ் எண்டார்க், கடந்த மாதத்தில் 27,649 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள ஹீரோ பிளஷர்+ 6-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பிளெண்டர் மூலம் பைக்குகள் விற்பனையில் கோலோச்சி விளங்கினாலும், ஹீரோ பிராண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக பிளஷர்+ மாடல்தான் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 16,589 பிளஷர்+ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில் இதனை காட்டிலும் ஏறக்குறைய 600 பிளஷர்+ ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தன. 7வது இடத்தில் சுஸுகியின் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலான பர்க்மேன் ஸ்ட்ரீட் 12,146 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது.

எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்..? டாப் 10 லிஸ்ட் இதோ..! இதை தெரிஞ்சிக்காம வாங்காதீங்க..!

8-வது இடத்தை ஹீரோ டெஸ்டினி உள்ளது. கடந்த மாதத்தில் 11,213 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள டெஸ்டினியின் விற்பனை ஆனது 2021 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களை யமஹா ஸ்கூட்டர்களான Yamaha Ray ZR மற்றும் Fascino முறையே 10,124 மற்றும் 9,150 யூனிட்களின் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Chella

Next Post

அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயம்.. யுஜிசி அதிரடி உத்தரவு...

Mon Sep 19 , 2022
ராகிங்கை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராவை பொருத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. நடப்பு கல்வியாண்டுக்கான ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.. இதுகுறித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் “ ராகிங்கை தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். ரேகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.. முக்கிய இடங்களில் எச்சரிக்கை […]
’ஹாய் டா மச்சா’..!! மாணவியாக நடித்து ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்த பெண் காவலர்..!! குவியும் பாராட்டு..!!

You May Like