fbpx

பிறரை விட ஒரு சிலரை மட்டும் கொசு ஏன் கடிக்கின்றது? …. இதோ சில காரணங்கள்…

ஒரு சிலரைப் பொருத்தவரை கொசுக்கள் மற்றவர்களைக் காட்டிலும் எதிரிதான. ஒவ்வொருவரின் உடல் சூடு மற்றும் உடலில் இருந்து வெளியேற்றப்படும் நறுமணம் மற்றும் இயற்கையாகவே தோல் சுவாசிக்கும் தன்மையைப் பொறுத்து கொசு கடிக்கின்றது….

ஒருவரின் உடலில் இருந்து வெளியேறக்கூடிய துர்நாற்றம் அவர் உண்ணும் உணவைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். சில உணவுப்பொருட்கள் அவர்களின் ஈர்ப்பைபொருத்து பாதிப்பை ஏற்படுத்துமா என ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ள தகவல்களை பார்க்கலாம்.

ஒரு சில நேரங்களில் நீங்களே கவனித்திருப்பீர்கள் கொசுக்கள் அவரை மட்டும் சுற்றி சுற்றி வந்து கடிக்கும். அந்த நபரையே கொசுக்கள் ஈர்க்கும். இது சாப்பிடும் உணவு என்கின்றனர்.

கொசுக்களை எவற்றையெல்லாம் ஈர்க்கின்றன …

கொசுக்கள் மிகவும் நல்ல கண்பார்வையை கொண்டிருக்கின்றன. குறிப்பாக மாலை நேரத்திற்கு பின் அவைகளுக்கு கண்கள் நன்றாக தெரியுமாம். மேலும் கறுப்பாக இருப்பவர்களை நெருங்கி கொசுக்கள் அதிகமாக இருக்குமாம். ஊதா நிறத்தில் , சிவப்பு நிறத்திலான ஆடைகள் கொசுக்களை கவர்கின்றது. எனவே அவர்களை சுற்றி சுற்றி வருகின்றது. மேலும் நம்மில் இருந்து வெளிப்படும் கார்பன்டை ஆக்சைடு கொசுக்களை வரவேற்கின்றது.

உடலில் வேகமான வளர்சிதை மாற்றங்கள் கொண்டுள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள் , கர்ப்பிணி , மற்றும் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுபவர்கள் கொசுக்கள் எளிதாக கடிக்கும். தோலில்இருந்து வெளியேறும் நறுமணம் , மூச்சுக்காற்று ஆகியவையும் ஒரு காரணம் .

உடற் செயல்பாட்டின்போது வெளியிடப்படும் லேக்டிக் என்ற அமிலம் வெளியேறுகின்றது. இதை வைத்து கூட கொசுக்கள் நம்மை நெருங்குகின்றன. அசிட்டோன் எனப்படும் வாயு (மூச்சுவிடும்போது வெளிப்படும் ஒன்று ) மற்றும் எஸ்ட்ரேடல் எனப்படும் உடல் வேதிப்பொருள் இவை எல்லாம் நம்மிடம் ஈர்க்கின்றன.

உடலின் வெப்பநிலை ஒவ்வொரு உடலுக்கு மாறுபடுகின்றது. சாதாரணமானவர்களை விட கர்ப்பிணிகளை கொசுக்கள் வெகுவாக கவர்ந்திழுக்கின்றது. ஏனெனில் அதிகமான உடல்சூடுதான் இதற்கு காரணமாக இருக்கின்றது. சமீப காலங்களில் கொசுக்கள் கடிப்பதனால் டெங்கு போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் அசிடோபீனோன் எனப்படும் வளர்ச்சிதை மாற்றம் கொண்ட அமிலமாகும். இவை பொதுவாக சோப்பு , வாசனை திரவங்கள், உணவுப் பொருட்களில் சுவைக்காக போடப்படும் பொருட்களில் உள்ளது.

எந்தெந்த பொருட்கள் கொசுக்களை ஈர்க்கின்றது

  1. வாழைப்பழம் – வாழைப்பழம் உலகின் எந்த மூலையிலும் கிடைக்கும் பழம். 1000 வகையான வாழைப்பழங்கள் உள்ளன. சில பழங்கள் உணவு சமைக்கவும் பயன்படுகின்றது. ஒரு ஆய்வின்படி மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் வகை கொசு நாம் வாழைப்பழத்தை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிகமாக ஈர்க்கப்படுகின்றது என கூறுகின்றது.
  2. ஆல்கஹால் – நாம் குடிக்கும் ஆல்கஹால் கூட உடலில் வேதிக்கூறுககளை அதிகரிக்கச்செய்து கொசுக்களை நம்மை நெருங்க விடுகின்றோம். ஒருவர் 350 மிலி ஆல்கஹால் குடித்த பின்னர் அதிக அளவிலான கொசுக்கள் அவரை நெருங்குகின்றது என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
  3. கேஃபைன் – காபியில் உள்ள கேபைன் மூலப்பொருள் நமது உடலில் வெளியேறும் வாசனையை மாற்றுகின்றது. இதனால் கொசுக்கள் எளிதாக அண்டுகின்றது. காபிக்கு அடிமையாக உள்ளவர்களை கொசுக்கள் அதிக அளவில் ஈர்க்கின்றன. காபியை கம்மியாக அருந்துபவர்களை குறைவாகவே நெருங்குகின்றன.

கொசுக்கள் நம்மை நெருங்குவதை எவ்வாறு தடுப்பது …

  1. கொசுக்களை எதிர்க்கும் எண்ணெயை உடலில் தடவிக்கொள்வதால் நம்மை கொசு நெருங்காது. எலுமிச்சை , யூகலிப்ட்ஸ் எண்ணை  போன்றவற்றை தடவலாம்.
  2. நீளமான கை மற்றும் பேண்டுகளை அணிவதனால் கொசுக்களுக்கு நாம் கடிக்க இடம் கொடுக்காமல் பாதுகாக்கலாம்.
  3. கொசுக்கள் அதிகமாக உலவும் நேரத்தில் நாம் அந்த இடத்தில் இருந்து விலகி வேறு இடத்திற்கு செல்வதனால் கொசு கடியில் இருந்து தப்பிக்கலாம். வெளியில் செல்வதை தவிர்ப்பதால் கொசுகடியில் இருந்து தப்பலாம்.
  4. மற்றபடி வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காமல் பாதுகாப்பது , பக்கெட்டில் தேங்கிய தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றால் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க முடியும். பறவைகளுக்கு வீட்டுக்கு வெளியில் வைக்கப்படும் தண்ணீரை மாற்றிக் கொண்டே இருப்பதனால் நாம் கொசுக்களில் இருந்து தப்பிக்கலாம்.
  5. வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் கதவை மூடி வைத்தல் , ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் போட்டு வைத்தல் . நன்றாக அனைத்து பக்கங்களிலும் மூடப்பட்டு உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Next Post

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை ?

Mon Sep 19 , 2022
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் எனவே பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ? கோவில்கள் , காய்கறிக்கடைகளில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் மட்டும் கூட்டம் அலைமோதும் . அசைவ கடைகளில் அந்த மாதம் முழுவதும் வியாபாரம் பெரிய அளவில் நடக்காது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால்தான் […]

You May Like