fbpx

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை ?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் எனவே பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ?

கோவில்கள் , காய்கறிக்கடைகளில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் மட்டும் கூட்டம் அலைமோதும் . அசைவ கடைகளில் அந்த மாதம் முழுவதும் வியாபாரம் பெரிய அளவில் நடக்காது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால்தான் இந்த மாதம் முழுவதும் யாரும் அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

புரட்டாசி மாதத்தில் காலையில் வெயில் அதிக அளவு இருக்கும் எனவே உடல் சூடு அதிகரித்துவிடும் அதுவே மாலையில் குளிர் அதிகமாகும் எனவே உடல் குளிர்தன்மையை பெற்று உறைந்துவிடுவோம்.

இவ்வாறு வெயிலும் , குளிரும் , மழையும் போட்டி போட்டுக் கொண்டு இக்காலக்கட்டங்களில் வாட்டி வதைக்கும். இதற்கிடையில் மனிதனாகிய நாம்தான் வதைபடுவோம்.

எனவே இந்த புரட்டாசி மாதத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாறுவதால் நோய்கள் கூட எளிதாக நம்மைத் தாக்கும். எனவே மனிதர்களை மட்டமின்றி விலங்குகளையும் சூரிய வெயில் தாக்கும். இது போன்ற காலத்தில் அசைவம் சாப்பிட்டால் செரிமான கோளாறு , நோய்த்தொற்று ஏற்படும் .

முன்னோர்களின் அறிவு : நம் முன்னோர்களை நாம் செய்யக்கூடிய விஷயங்களை நமக்கு உரைக்கும்படித்தான் கூறியிருப்பார்கள். இது பல விஷயங்களுக்கு முன் உதாரணம் . அதே போலத்தான் .. இந்த விஷயத்திலும் அறிவியல் என கூறினால் நாம் காது கொடுத்து கேட்க மாட்டோம்.. அதுவே புரட்டாசி மாதத்தில் ’’அசைவம் சாப்பிட்டால் சாமி கண்ண குத்தும் ’’ என சொன்னால் நாம் அதை கடைப்பிடிப்போம். அதனால்தான் பெருமாள் பெயரில் அதை இதுவரை கடைபிடிக்கின்றோம்.

துளசி தீர்த்தம் குடிப்பது ஏன் : துளி பொதுவாகவே நமக்கு ஒரு நன்மை பயக்கும் மூலிகை. நோய் பரவி எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே இது போன்ற சமயத்தில் துளசி தீர்த்தம் குடித்தால் நோய்த்தொற்று நம்மை அண்டாமல் நம் உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதுதான் நாம் அசைவம் சாப்பிடாமல் இருக்க காரணம் ..

Next Post

வேலையை இழப்பது போல் கனவு வந்தால்.. என்ன அர்த்தம் தெரியுமா..?

Mon Sep 19 , 2022
மனிதர்கள் கனவு காண்பது என்பது இயல்பான ஒன்று தான்… சில சமயம் கெட்ட கனவுகளும் வரும்.. சில சமயம் நல்ல கனவுகளும் வரும். இருப்பினும், கனவு சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கனவும் நிச்சயமாக சில அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான நல்ல அறிகுறிகளாக கருதப்படும் சில கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொருட்களை வாங்குவது போல் கனவு வந்தால்.. நீங்கள் உங்கள் கனவில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், […]

You May Like