சூரிய புயல்கள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமியை தாக்கி வருகின்றன. இந்த சூரிய புயல்கள் பூமியில் உள்ள சக்தி மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை அழிக்கக்கூடிய பெரிய பின் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கும் அளவுக்கு வலுவான சூரியப் புயல் எப்போதாவது பூமியைத் தாக்க முடியுமா? அல்லது பூமி மீண்டும் போராடி உயிர்வாழ முடியுமா? விரிவாக பார்க்கலாம்..
சூரிய புயல் என்றால் என்ன..?சூரிய புயல்கள் சூரியனின் மேற்பரப்பில் அமைக்கப்படும் கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) காரணமாக ஏற்படுகின்றன. இந்த வெளியேற்றம் சூரிய எரிப்புகளை பூமியை நோக்கி அனுப்புகிறது. பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலத்தை அளவிடும் K-குறியீட்டின்படி, சூரிய புயல்கள் G-1 முதல் G-5 வரை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. G-1 என்பது மிகக் கடுமையான சூரியப் புயல்களுக்குக் கொடுக்கப்படும் சூரிய G5 மிகக் குறைந்த தாக்கமாகும்.
சூரிய புயலின் தாக்கம் : அதிவேக சூரிய புயல்கள் பூமியின் மின்காந்த புலத்துடன் தொடர்பு கொள்வதுடன், புவி காந்த புயல்களை தூண்டுகின்றன. நாசாவின் கூற்றுப்படி, புவி காந்தப் புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தின் ஒரு பெரிய இடையூறு ஆகும், இது பூமிக்கு மேலே உள்ள விண்வெளியில் சூரியக் காற்றிலிருந்து வலுவான ஆற்றல் பரிமாற்றம் இருக்கும்போது ஏற்படுகிறது. சூரிய புயல்களின் முக்கிய விளைவுகளில் ஒன்று ரேடியோ பிளாக்அவுட் ஆகும். அதாவது சூரிய புயலானது பூமியைத் தாக்கும் போது, அது பூமியின் காந்தப்புலத்தை தாக்குவதால் வானொலித் தொடர்புகள் மற்றும் மின் கட்டங்கள் பாதிக்கப்படுகின்றன.
சூரிய புயல்கள் பறவைகள், திமிங்கலங்கள் மற்றும் தேனீக்களின் இடம்பெயர்வு முறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பறவைகள் தங்கள் பயணத்திற்கு பூமியின் காந்தப்புலங்களை நம்பியிருப்பதால், அவற்றின் இடம்பெயர்வு முறை பாதிக்கப்படுகிறது.
சூரிய புயல்கள் கிரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் திறன் கொண்ட பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அவை மிக அழகான நிகழ்வுகளில் ஒன்றாகும்.. அரோரா என்று அழைக்கப்படும் ஒரு வகை வெளிச்சம் இரவு வானத்தில் பச்சை, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் தோன்றும்..
சூரிய புயல் பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமா? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமிக்கு இரண்டு தனித்துவமான நன்மைகள் உள்ளன.. காந்தப்புலம் மற்றும் வளிமண்டலம். பூமியின் வளிமண்டலம் ஒரு இன்சுலேட்டராக செயல்படுகிறது..பெரும்பாலான சூரிய துகள்களை உறிஞ்சும் போது காந்தப்புலம் சூரிய எரிப்புகளை நிறுத்த சூரிய எரிப்புகளுடன் தொடர்பு கொள்கிறது.
நாசா விஞ்ஞானி அலெக்ஸ் யங், இதுகுறித்து பேசிய போது “ நாம் மிகவும் அடர்த்தியான வளிமண்டலத்தில் ஒரு கிரகத்தில் வாழ்கிறோம்? சூரிய ஒளியில் உற்பத்தியாகும் அனைத்து தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளையும் நிறுத்துகிறது. கடந்த 10,000 ஆண்டுகளில் நாம் பார்த்த மிகப்பெரிய சூரியப்ப்புயல் நிகழ்வுகளில் கூட, வளிமண்டலத்தை சேதப்படுத்தும் அளவுக்கு அதன் விளைவு போதுமானதாக இல்லை..” என்று தெரிவித்தார்.. எனவே, சூரிய புயலால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், பேரழிவுகளை சூரிய புயல்கள் ஏற்படுத்தாது என்பதை உறுதியாக நம்பலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்..