fbpx

’மாரடைப்பின் அறிகுறிகள் பெண்களுக்கு முன்கூட்டியே தெரியுமாம்’..!! ’இதெல்லாம் உங்களுக்கும் இருக்கான்னு பாருங்க’..!!

மாரடைப்பு என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் வயதானவர்களுக்குத்தான் வரும் என நிலவிவந்த கருத்து சமீபகாலமாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் அடிக்கடி நாம் கேள்விப்படும் இளம்வயது மாரடைப்பும், மரணங்களும்தான். பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு அதிகம் வரும். ஆனால், 50% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு வந்ததே தெரியாமல் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. நிறைய நேரங்களில் பெண்கள் தங்களுக்கு வரும் மாரடைப்பை மன பதற்றம் அல்லது நெஞ்செரிச்சல் என்றே நினைத்து விடுகின்றனர். ஆனால், 40% பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான ஒரு குறிப்பிட்ட அறிகுறி கட்டாயம் தென்படும் என ஆய்வு சொல்கிறது.

’மாரடைப்பின் அறிகுறிகள் பெண்களுக்கு முன்கூட்டியே தெரியுமாம்’..!! ’இதெல்லாம் உங்களுக்கும் இருக்கான்னு பாருங்க’..!!

சர்குலேஷன் ஜர்னலில் வெளியான அறிக்கையில், மாரடைப்பு மற்றும் அஜீரணக்கோளாறு பிரச்சனைக்காக தொடர்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது, மாரடைப்பு வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அஜீரணக்கோளாறு பிரச்சனை இருக்குமாம்.

’மாரடைப்பின் அறிகுறிகள் பெண்களுக்கு முன்கூட்டியே தெரியுமாம்’..!! ’இதெல்லாம் உங்களுக்கும் இருக்கான்னு பாருங்க’..!!

மாரடைப்புடன் தொடர்புடைய அஜீரணம் எப்படி இருக்கும்?

ஒருவருக்கு பல்வேறு விதமான காரணங்களால் அஜீரணக்கோளாறு ஏற்படலாம். ஆனால், அதை எப்போதும் ஒரே மாதிரி நினைத்து விட்டுவிடக்கூடாது. உணவு சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களை குடித்தபிறகோ, அஜீரணப் பிரச்சனைக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அதனை கவனிக்க வேண்டும்.

1. ஏப்பம்

2. வாயுத்தொல்லை

3. வயிறு உப்பியதுபோன்றோ அல்லது நிறைவாகவோ இருத்தல்

4. நெஞ்செரிச்சல்

5. உடல்நலமின்மை

6. வாயில் கசப்புணர்வு

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள்…

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதம் முன்பு…

1. அஜீரணம் – 39%

2. மூச்சுத்திணறல் – 42%

3. பதற்றம் – 36%

4. அசாதாரண சோர்வு – 71%

5. தூக்கத்தில் தொந்தரவு – 48%

மாரடைப்பின்போது ஏற்படும் அறிகுறிகள்…

1. குளிர்ந்த வியர்வை – 39%

2. மயக்கம் – 39%

3. பலவீனம் – 55%

4. மூச்சுத்திணறல் – 58%

5. அசாதாரண சோர்வு – 43%

மாரடைப்பின் அபாயத்தைக் குறைப்பது எப்படி..?

1. உடற்பயிற்சி

2. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்தல்

3. புகைப்பிடித்தலை கைவிடுதல்

4. ஆரோக்கியமான உணவு

5. எடை கட்டுப்பாடு

6. மதுப்பழக்கத்தை கைவிடுதல்

7. கொழுப்பு அளவை கட்டுப்படுத்துதல்

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இது மிக மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாக்கும். 

Chella

Next Post

TnGovt: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை...! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்...!

Fri Oct 14 , 2022
சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு […]

You May Like