fbpx

சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..?

சிவபெருமானின் சிலை அல்லது படத்தை தினமும் தரிசிக்க வேண்டும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.. அதனால்தான், ஒவ்வொரு இந்து வீடுகளிலும் சிவபெருமானின் படம் சிறப்பாக வைக்கப்படுகிறது, இதனால் சிவபெருமானின் அருளையும் புண்ணிய பலனை பெற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது… ஆனால் வீட்டில் சிவபெருமானின் படத்தை வைக்கும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் அதுவும் அசகுணப் பலன்களை சந்திக்க நேரிடும்.

சிவபெருமான் நடனமாடும் படத்தை வீட்டில் வைக்கக்கூடாது, ஏன்? பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் கோப ரூபத்தை தினமும் தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களின் இயல்பில் கோபமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் தாண்டவம் ஆடும் சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டுமாம்..

வீட்டில் சிவன் சம்பந்தப்பட்ட படத்தை வைக்க வேண்டுமானால், 12 ஜோதிர்லிங்கங்களில் ஏதேனும் ஒரு படத்தை வைக்கலாம். இது வீட்டில் நேர்மறை சக்தியை பரப்புகிறது.. அதன் நல்ல பலன் வீட்டில் வசிப்பவர்களிடமும் தெரியும். சிவபெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வடிவில் இருக்கும் வீட்டில் சிவபெருமானின் சாந்த நிலையைப் பற்றிய படத்தையும் வைக்கலாம். அப்படிப்பட்ட சிவபெருமானின் படத்தை வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவுகிறது.

சிவபெருமான் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். படத்தை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருங்கள். மாதவிடாய் நிலையில் உள்ள பெண்கள் சிவபெருமான் படத்தை தொடக்கூடாது. சிவபெருமானுக்கு போடப்பட்டுள்ள மலர் மாலைகள் காய்ந்துவிட்டால், அவற்றை உடனடியாக அகற்றவும்.

Maha

Next Post

எதுவுமே செல்லாது.. அதிர வைத்த தீர்ப்பு.. இபிஎஸ் இன்று மேல்முறையீடு..

Thu Aug 18 , 2022
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு சாதகமாக நேற்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது […]

You May Like