ரயில் பிரயாணத்தின்போது நீங்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் போது ரயில் தாமதமாக வந்தால் அதற்குண்டான பலனை நீங்கள் பெறுவீர்கள்.
மக்களுக்கு நீண்ட தூர பயணங்களுக்கு உதவியாக இருப்பது, ரயில்கள் தான். பயணிகள் முன்பதிவு செய்து கொள்வதற்கும் , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணத்திற்கான டிக்கெட்டை ரத்து செய்யவும் பல வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பான வாய்ப்பு அளிக்கின்றது. இதனை பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டிய ரயில் 2 மணி நேரங்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உணவு வழங்க வேண்டியது கட்டாயமாகும். 2 மணி நேரம் தாமதமானால் இந்த சலுகை செல்லுபடியாகாது. அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால்,விதிமுறைகளின் படி, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற விரைவு ரயில்களில் பணிகளுக்கு அளிக்கப்படும் உணவுகளுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது.
காலை உணவிற்கு டீ, காபி, 2 பிஸ்கட், மாலையில் டீ, காபி, 4 பிரட் துண்டுகள்,மதிய உணவில் ரைஸ், பருப்பு, ஊறுகாய் இரவு உணவில் 7 பூரிகள், வெஜ் அல்லது உருளைக்கிழங்கு, ஊறுகாய் பாக்கெட் கொடுக்கப்படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி.ன். இந்த பலனை பயணிகள் முழு உரிமையோடு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.