திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு தாரர் தரப்பு என அனைத்து வாதங்களும் முன் வைக்கப்பட்டது..
இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு தாரர் தரப்பு என அனைத்து தரப்பினும் தங்கள் இறுதி வாதத்தை முன் வைத்தனர்.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. எழுத்துப்பூர்வ வாதங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
தொடர்ந்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ திருப்பரங்குன்றம் மலையில் தர்கா பக்கத்தில் இருப்பது கார்த்த்கை தீபத்தூணே இல்லை என்பது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. கார்த்திகை தீபத்தூண் என்பது மலை உச்சியில் இருப்பது தான்.. சமணர் தூணா என்பது இரண்டாம் பட்சமானது.. இது தீபத்தூண் கிடையாது என்பதை தெளிவாக நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.. அது தீபத்தூண் என்பதற்கான ஆதாரம் இல்லை என்பது தான் அரசின் நிலைப்பாடு..
இந்த தூணின் வரலாறு என்ன? துவக்கம் என்ன? என்பதற்கான எந்த ஆதாரமும் மனுதாரர்களால் கொடுக்கப்படவில்லை.. அது தீபத்தூண் தானா? அது எப்போதிருந்து உள்ளது என்பதற்கான ஆதாரமும் வழங்கப்படவில்லை..
1923-ம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்ற நீதிபதி ராமய்யர், வழங்கிய தீர்ப்பில் மலை உச்சியில் இருப்பது தர்கா மட்டும் தான் உள்ளது.. வேறு எந்த மத சின்னங்களும் அங்கு இல்லை என்று பதிவு செய்துள்ளார்.. மலைப்பகுதியில் இருக்கூடிய ஒரே புனிதமான இடம் மசூதி மட்டும் தான்.. என்பது தான் அந்த தரப்பு… கோயில் மரபின் படி தீபம் ஏற்றும் இடத்தை மாற்றக்கூடாது என்பது அரசின் நிலைப்பாடு.. இந்த அனைத்து வாதங்களையும் முன்வைத்தோம்.. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ. 5550… தபால் நிலையத்தின் இந்த அற்புதமான திட்டம் பற்றி தெரியுமா..?



