திருப்பரங்குன்றம் தீப வழக்கு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது..
இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 4-ம் தேதி மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.. 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மலை மீது ஏற முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து கோயிலை நொக்கி பாஜகவினர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. மலையேற அனுமதி கோரிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்..
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.. இந்த மனு விரைவில் விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள கல் விளக்குத்தூண் மீது 24 மணி நேரமும் நிரந்தரமாக விளக்கேற்றவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தீபம் ஏற்றி வழிபட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Flash : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணை..!



