திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. எனினும் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்காததால் கிராம மக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.
10 நாட்களுக்கு தேடியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திலும் துப்பு கிடைக்கிறதா என்றும் போலீசார் தேடி வந்தனர்.. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையிலும், அவர் கூறிய அடையாளங்களை வைத்தும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வந்தது..
மேலும் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரின் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டும் அவரை பார்த்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். மேலும் இந்த நபர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.. ஏற்கனவே 2 பேரை காவல்துறையினர் விசாரித்தனர்.. ஆனால் அவர்கள் இல்லை என்று சிறுமி கூறிவிட்டார்.
இந்த நிலையில் தற்போது உண்மையான குற்றவாளி சிக்கினார். சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் அதே உடையுடன் இருந்த இளைஞரை போலீஸ் கைது செய்தது.. அவரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பிடிபட்ட இளைஞரை திருவள்ளூர் சிறுமி அடையாளம் காட்டினார்..