ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறத் தொடங்கி உள்ளனர்.. இருப்பினும், நாம் அறியாமலேயே உட்கொள்ளும் ஒரு விஷயம், கொழுப்பை விட இதயத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்று இருதயநோய் நிபுணரான டிமிட்ரி யாரனோவ் எச்சரித்துள்ளார்.. அது என்ன தெரியுமா?
சத்தமே இல்லாமல் இதயத்தை பாதிக்கும் பொருள்
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் குறித்து டாக்டர் டிமிட்ரி யாரனோவ் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “உங்கள் இதயத்தை அமைதியாக அழிக்கும் முதல் விஷயம் கொலஸ்டரால் இல்லை.. அது பானங்கள், சிற்றுண்டிகள், சாஸ்கள் மற்றும் ‘ஆரோக்கியமான’ உணவுகளில் மறைந்திருக்கும் சர்க்கரை தான்.. இது இதயங்களை காயப்படுத்துகிறது நீரிழிவு நோயைத் தூண்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆனால் சர்க்கரை எவ்வாறு இவ்வளவு தீங்கு விளைவிக்கிறது? இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி, “ஒரு நாளைக்கு ஒருமுறை சர்க்கரையை உட்கொள்வது 18 சதவீதம் அதிக இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை என்றால் 21 சதவீதம் அதிகம்.. உடற்பயிற்சி செய்பவர்களிடமும் கூட இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார்..
2025 ஆம் ஆண்டில், அதிக சர்க்கரை உட்கொள்ளல், குறிப்பாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து, இதய நோய் அபாயத்தை 17 சதவிகிதம், கரோனரி தமனி நோய் 23 சதவிகிதம் மற்றும் பக்கவாதம் 9 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்..
மேலும் டிமிட்ரி தனது பதிவில் “உலகளவில், இது ஒரு வருடத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான புதிய இதய நோயாளிகளுடனும் 2.2 மில்லியன் புதிய வகை 2 நீரிழிவு நோயாளிகளுடனும் சர்க்கரை தொடர்புடையது. JAMA இன்டர்னல் மெடிசின் ஆய்வில், சர்க்கரையிலிருந்து கலோரிகளில் 25 சதவிகிதம் பெறுபவர்கள், 10 சதவிகிதத்திற்கும் குறைவான உணவை உட்கொள்பவர்களை விட, இருதய நோயால் இறக்கும் அபாயத்தை இரண்டு மடங்கு அதிகமாகக் கண்டறிந்துள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்…
மேலும், சர்க்கரை வீக்கத்தைத் தூண்டுகிறது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, கொழுப்பை மோசமாக்குகிறது மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை சீர்குலைக்கிறது – இதயம் மற்றும் கணையத்திற்கு இரட்டை பாதிப்பு. அமெரிக்க இதய சங்கம் ஒருவர் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது என்பதையும் பகிர்ந்து கொண்டார்..
- பெண்கள்: 6 தேக்கரண்டி/நாள் (~100 கலோரி)
- ஆண்கள்: 9 தேக்கரண்டி/நாள் (~150 கலோரி)
மேலும் “பெரும்பாலான மக்கள் அதை அறியாமலேயே 2-3 முறை சாப்பிடுகிறார்கள். உங்கள் லேபிள்களைச் சரிபார்க்கவும். அதை வரம்பிடவும். உங்கள் இதயத்தையும் உங்கள் ரத்த சர்க்கரையையும் பாதுகாக்கவும்.” என்று டிமிட்ரி எச்சரித்துள்ளார்..
Read More : உங்கள் இதயம் செயலிழக்க போகிறதா..? முன்கூட்டியே காட்டிக் கொடுக்கும் கால்கள்..!! சாதாரணமா நினைக்காதீங்க..!!