விமான நிலையம், சொந்தமாக கரன்சி இல்லாத இந்த நாட்டு மக்கள் பணக்காரர்களாக வாழ்கின்றனர்.. அது எந்த நாடு தெரியுமா?
சுவிட்சர்லாந்து – ஆஸ்திரியா இடையே மறைந்திருக்கும் ஒரு சிறிய ஐரோப்பிய நாடு அமைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் இந்த நாடு குறித்து கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.. இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.. இந்த நாட்டிற்கென சொந்தமாக கரன்சியும் இல்லை, அதிகாரப்பூர்வ தேசிய மொழியும் இல்லை. ஆனால், இது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், பாதுகாப்பான ஒன்றாகவும் உள்ளது..
இந்த நாட்டின் பிரம்மிப்பூட்டும் நிலப்பரப்புகள், அரண்மனைகள் காண்போரை ஈர்க்கிறது.. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நாட்டில் குற்ற விகிதம் மிகக் குறைவாக உள்ளது.. இதனால் இந்த நாட்டில் மொத்தம் 7 பேர் மட்டுமே சிறையில் உள்ளனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்… இந்த நாடு, லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்தில், இந்த பணக்கார நாடு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தி சோல் கனெக்ட் (TheSoulConnect) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.. அந்த பதிவில், “லீச்டென்ஸ்டைன் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆனால் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு மிகவும் தனித்துவமானது. ங்கள் வேறு நாட்டிற்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் இங்கு விமான நிலையம் இல்லை.. இந்த நாட்டிற்கென சொந்த கரன்சி இல்லை..
இந்த நாட்டு மக்கள் சுவிஸ் பிராங்க் கரன்சியை பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டு மக்களுக்கு என சொந்தமான அதிகாரப்பூர்வ மொழி இல்லை.. ஜெர்மன் மொழி இங்கு பேசப்படுகிறது.. ஆனாலும், இது பூமியில் உள்ள பணக்கார மற்றும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும். லிச்டென்ஸ்டைன் இதை நிரூபிக்கிறது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
லிச்டென்ஸ்டைன் நாட்டின் மக்கள் தொகை சுமார் 30,000 மட்டுமே.. இந்த நாடு உலகின் பணக்கார நாடாகக் கருதப்படுகிறது. இந்த நாட்டின் பிரிட்டிஷ் மன்னரை விடவும் பணக்காரர் என்று உங்களுக்குத் தெரியுமா? இங்கே, மக்கள் வாழ்வாதாரத்திற்கு வேலை செய்ய தேவையில்லை.. மாறாக ஓய்வு நேரத்தை செலவிடக்கூடிய அளவுக்கு செழிப்பாக உள்ளனர்.. அதாவது வாழ்நாள் முழுவதும் வேலை செய்யாத அளவுக்கு இந்த மக்கள் பணக்காரர்களாக வாழ்கின்றனர்.. மேலும் வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்ய அவர்களுக்கு போதுமான நேரம் அளிக்கிறது.
லிச்சென்ஸ்டீன் நாட்டில் மிகக் குறைந்த அளவே வரி விதிக்கப்படுகிறது.. இதனால் இந்த நாட்டு மக்கள் பயனடைகிறார்கள். மேலும் இந்த நாட்டின் மீது எந்த கடனும் இல்லை… இங்கு ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது சமூகத்தின் அடித்தளமாகும்.. ஆனால் அதே நேரம் தங்களின் செல்வத்தை வெளிப்படுத்துவது பொதுவாக அவமரியாதையாகக் கருதப்படுகிறது. இங்கு குற்ற விகிதங்கள் கிட்டத்தட்ட இல்லை. அதனால்தான், லிச்சென்ஸ்டீனில் சுமார் 100 காவல்துறை அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இரவில் மக்கள் கவலைப்படாமல் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்தே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்…
லிச்சென்ஸ்டீனின் பிரம்மிப்பூட்டும் நிலப்பரப்புகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பார்த்து பிரமித்த நெட்டிசன்கள் இந்த வீடியோ மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற ஒரு நாட்டில் வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. பயனர்கள் பலரும் இங்கு வாழ விரும்புவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
பயனர் ஒருவர், “நான் அங்கு வாழ விரும்புகிறேன், தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள்” என்று கூறினார். மற்றொரு பயனர் “தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள், லிச்சென்ஸ்டீனில் வாழ விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.. இன்னொரு பயனர் “”தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள். அங்கு வாழ்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்று பதிவிட்டுள்ளார்..