“இந்த தேர்தல் என்.டி.ஏ Vs தமிழ்நாடு.. அதிமுக – பாஜக கூட்டணியை எல்லைக்குள்ளேயே விடமாட்டோம்..” முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

stalin magalirani manadu

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்..


இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் நோக்கம் அல்ல.. பெண் விடுதலையும் தான். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி..

பெண் காவலர்களை உருவாக்கியவர் கலைஞர்.. நமது திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.. நாம் முதல்வர் ஆன உடன் போட்ட முதல் கையெழுத்தே விடியல் பயணத் திட்டத்திற்கு தான்.. மக்கள் அதற்கு ஸ்டாலின் பஸ் என்று பெயர் வைத்துவிட்டனர்.. இது தான் அந்த திட்டத்தின் வெற்றி.. புதுமை பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தோழி விடுதிகள், என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்..

 பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்கிறோம்.. பெண்ணுரிமைக்கான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.. உரிமைத்தொகை பயனுள்ளதாக இருக்கிறது, ஸ்டாலின் பஸ்ஸில் தான் வேலைக்கு செல்கிறோம் இப்படி பெண்கள் மனநிறைவாக உள்ளது..

இந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற கூடிய வகையில் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.. இதை எல்லாம் வீடு வீடாக சென்று பரப்புரை செய்யும் கடமையை பெண்களான உங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.. மகளிர் தான் எப்போதும் பவர் ஹவுஸ்..

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 5 மாநாடுகளை திமுக நடத்தப் போகிறது.. மகளிரான நீங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார்..

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அபாண்டமான பொய்யை சொல்லிவிட்டு சொல்கிறார்.. எப்படி கூச்சம் இல்லாமல் பொய் பேசுகிறார்.. தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப விமானத்தில் வந்து சென்றிருக்கிறார்.. ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் தலைநிமிர்ந்து சொல்கிறேன்.. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்..

பிரதமர் அவர்களே மணிப்பூரை மறந்துவிட்டீர்களா? உங்கள் டபுள் எஞ்சின் அரசு ஏன் மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை? இதுதான் பாஜகவின் லட்சணம்.. இதை மறைத்துவிட்டு, அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீங்க..

தோற்ற கூட்டணியை புதுப்பித்துக் கொண்டு அதற்கு பில்டப் கொடுத்திருக்கின்றனர்.. 2019, 2021 தேர்தல்கள் இந்த அதிமுக பாஜக கூட்டணி ஒன்றாக நின்று பார்த்தார்கள்.. தோற்று போனார்கள்.. 2024 தேர்தலில் தனித்தனியாக நின்றனர்.. அப்போதும் தமிழக மக்கள் கெட் அவுட் என்று சொல்லிவிட்டார்கள்.. அதிமுக – பாஜக கூட்டணி மிரட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. அமித்ஷா அவர்களால் திணிக்கப்பட்ட கூட்டணி.. பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி… டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளலாம் என்று பாஜக நினைக்கிறது.. உங்களுக்கு தக்க பதிலடியை தமிழ்நாடு தரும்.. இப்போது வெளிப்படையாக பாஜக அரசு என்று சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்..

நடக்கும் தேர்தல் என்.டி.ஏ Vs மதச்சார்பற்ற கூட்டணி அல்ல.. என்.டி.ஏ Vs தமிழ்நாடு.. என்பதை மறந்துடாதீங்க.. தமிழ்நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நாடே திரும்பி பார்க்கும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக தான்.. மதச்சார்பற்ற கூட்டணியை வெற்றி பெற வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.. நான் என்னை விட அதிகமாக நம்புவது தமிழ்நாட்டு மக்களை தான்.. எனவே நாம் எப்போதும் மக்களுடன் தான் இருக்க வேண்டும்.. வெல்லும் தமிழ்ப் பெண்களே புறப்படுங்கள்.. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய உழையுங்கள்.. வெல்வோம் ஒன்றாக…” என்று தெரிவித்தார்..

Read More : “கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் கூட்டணி.. உங்கள் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்..” அதிமுகவை விளாசிய கனிமொழி..!

RUPA

Next Post

உங்கள் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகள் இருக்கா?.. இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க..! அது அசுபமானது!

Mon Jan 26 , 2026
வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும், சிலர் அறைக்குள் நுழைந்தவுடன் ஒருவித அறியாத அசௌகரியத்தையும் எதிர்மறை அதிர்வையும் உணர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடிகளைத் தவறாக வைத்திருப்பதுதான் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று நேராக வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. இது வெறும் மூடநம்பிக்கை அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ன, அந்த அமைப்பு நமது மன […]
mirror 1

You May Like