“ திமுகவின் ஊழல் மாடல் அரசு, ஒரு குடும்பத்தின் ஏடிஎம் எந்திரமாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டது..” திருச்சியில் பிரதமர் மோடி சாடல்..!

modi in trichy

திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் “ வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மருதிருவர் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்..


மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக தூக்கி எறிய மொத்த மாநிலமும் தயாராகிவிட்டது. ஒரு குடும்பத்திற்கான ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

திருச்சி மண்ணில் ரூ.5655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தி உள்ளது. மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிகையை மாலையில் பாரீஸ், நியூயார்க்கில் விற்கலாம்..

2014 முதல் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டுள்ளது.. இது காங்கிரஸ் அரசு வழங்கிய நிதியை விட பல மடங்கு அதிகம்.. 2021-ம் ஆண்டு மக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.. ஆனால் மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது.

திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்திடம் இருக்கிறது.. அதிகாரம் ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கும்.. ஊழல் மாடலுக்கு பெயர் போன திமுக.. இந்த மாடல் அரசு தான் ஒரு குடும்பத்தின் ஏடிஎம் எந்திரமாக தமிழ்நாடு மாற்றப்பட்டு விட்டது. இதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் சிக்கி இருக்கிறார்.. தமிழ்நாட்டின்  பணம் எல்லாம் ஒரு குடும்பத்திடம் சென்று சேருகிறது.. திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” என்று தெரிவித்தார்..

Read More : “கருணாநிதி குடும்பத்திற்கு இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல்.. திமுக ஆட்சி அகற்றப்படும்..” NDA பொதுக்கூட்டத்தில் இபிஸ் பேச்சு..!

RUPA

Next Post

“தமிழ்நாட்டில் திமுக நிர்வாகிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் என்.டி.ஏ ஆட்சியில்..” பிரதமர் மோடி விமர்சனம்..!

Wed Mar 11 , 2026
திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார்.. மேலும் “ தமிழ்நாட்டின் பெண்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.. திமுக நிர்வாகிகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.. திமுக நிர்வாகிகளே பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமான சுற்றித்திரிந்து வாழ்கிறார்கள்.. சிறுமியை கூட விட்டுவைக்காத திமுக சேர்ந்த நபரின் மோசமான செய்தியை நாம் பார்த்தோம்.. […]
pm modi in trichy

You May Like