“இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்.. இந்த தேர்தல் அதிசய தேர்தல்.. ஏன்னா..” விஜய் ஸ்பீச்..!

Vijay Stalin

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சமீபத்தில் நம்ம சி.எம். ஸ்டாலின் சார், 2026 தேர்தல், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும்  இடையே நடக்கும் தேர்தல் என்று கூறுகிறார்.. ஆனால் சி.எம். சார் எதுவும் டெல்லியில் போட்டியிடப்போகிறாரா? என்று தெரியவில்லை.. இது என்ன லாஜிக் என்ற எங்களுக்கு புரியவில்லை.. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நமது தமிழ்நாட்டிற்கு தெரியும்.. நமது தமிழ்நாட்டு மக்கள் மாதிரியான தெளிவான மக்களை பார்க்க முடியாது..


உண்மையிலேயே இந்த தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்திற்கும் நடக்கும் போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் திமுக அரசுக்கும் நடக்கும் போர்.. தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்.. விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்.. இதற்கு நடுவில் இந்த என்.டி.ஏ, டெல்லி இதெல்லாம் என்ன லாஜிக் என்றே புரியவில்லை.. தமிழ்நாடு தான் விஜய், இந்த விஜய் தான் தமிழ்நாடு, தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்திக்கும் திமுகவுக்கும் தான் இந்த போர்.

அவரின் ஆட்சியில் ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறதாம்.. தமிழ்நாடு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆட்சியில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது.. ஆனால் தற்போது ஸ்டாலின் சார் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர்ஸ்டார் மாநிலமாக இல்லை.. சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது.. மக்களே, உங்களுக்காக மட்டும் தான் தடைகள், சூழ்ச்சியை தாண்டி தவெக தில்லாக நிற்கும்.. இது அதியச தேர்தல்.. ஒரு தேர்தலில் அவர்கள் அவர்களுடைய எதிரிகளை தான் எதிர்பார்ப்பார்கள்.. ஆனால் இந்த முறை தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து இந்த இந்த விஜய்யை எதிர்க்கின்றனர்..

ஏனெனில் இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான், லஞ்சத்தை எதிர்க்கிறான், மக்கள் விஜய் பக்கம் இருக்கிறார்கள் என்ற காண்டு.. அந்த காண்டு தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்க காரணம்.. ஆனால் போட்டி இருவருக்கு நடுவில் தான் ஒன்று திமுக, மற்றொன்று தவெக..” என்று தெரிவித்தார்..

Read More : “ ஸ்டாலின் சார், அறிவாலயம் பக்கம் யார் போனாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார்..” தேமுதிக கூட்டணியை விமர்சித்த விஜய்..!

RUPA

Next Post

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியை தூக்கிப் போட்டீங்க CM சார்..? மனசாட்சி இருந்தால் அப்படி பேசியிருப்பீங்களா..? விஜய் கேள்வி..!

Mon Feb 23 , 2026
வேலூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது “ இந்த தேர்தலில் உங்க வீட்டில் உள்ள ஒரு விஜய் தான், ஒரு விஜி தான் வேட்பாளராக நிற்கப் போகின்றனர்.. உங்கள் அம்மா, அப்பா, அண்ணன் தம்பி வேட்பாளர் என்றால் உங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான் என்று அனைவருக்குமே தெரியும்.. இது நம் எதிரிகளுக்கு கூட தெரியும்.. அதனால் அவர்கள் நம் மீது அவ்வளவு அவதூறு பரப்புகின்றனர்.. […]
vijay stalin

You May Like