இது செம ட்விஸ்டா இருக்கே..!! அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி..!! அதிர்ச்சியில் டாக்டர் ராமதாஸ்..!!

EPS Anbumani 2025

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாஜகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் போட்டியில், பாமக தற்போது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.


கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இரு தலைவர்களும் மாறி மாறித் தங்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.

இப்படியான நிலையில், கட்சியை நிறுவிய டாக்டர் ராமதாஸ், “இனி அன்புமணிக்கு கட்சியில் இடமில்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும்” என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. உட்கட்சிப் பூசலால் பாதிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இறங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக திமுக அரசை கடுமையாக சாடி வரும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார். இதற்கிடையே, அவர் நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது, கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியாகவே அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது. அதே சமயம், நிறுவனர் ராமதாஸுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுவது, பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Read More : அதிகாலையிலேயே 2 நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்..!! பீதியில் ஓடிய மக்கள்..!! தற்போதைய நிலை என்ன..?

CHELLA

Next Post

இந்து கடவுள்களை அவமதித்த முதல்வர் ஸ்டாலின்...! 2026-ல் மக்கள் பாடம் புகட்டுவது உறுதி...!

Thu Dec 4 , 2025
உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோத திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காலங்காலமாக கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றப்பட்டு வந்த, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது அறுபடை வீடுகளில் ஒன்றான […]
vanathi srinivasan 2025

You May Like