கரூர் துயரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது இடைக்கால உத்தரவு தான் என்றும் இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது இடைக்கால உத்தரவு தான் என்றும் இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இன்று உச்சநீதிமன்றம் வழங்கியது இடைக்கால தீர்ப்பு தான்.. இன்று வரை நடத்திய விசாரணை விவரங்களை சிபிஐக்கு மாற்றும்படி தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.. இன்று வரை எஸ்.ஐ.டி நடத்திய விசாரணை சரியானது தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும்..” என்று தெரிவித்தார்..
மேலும் தங்களுக்கு தெரியாமலே தங்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக இன்று கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் தெரிவித்தனர்.. மோசடியாக வழக்குப்பதிவு செய்து தீர்ப்பை பெற்றால், அந்த தீர்ப்பு ரத்தாக கூட வாய்ப்புள்ளது..
நீதிமன்றம் இன்று விசாரணை நடத்திய போது இருவரும் காணொளிக் காட்சி மூலம் ஆஜராஜி தாங்கள் புகாரளிக்க வில்லை என்று கூறினர்.. நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கிய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.. எனவே நீதிமன்றம் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கிறோம், மோசடியாக இருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தது.. இந்த தீர்ப்பு இடைக்கால உத்தரவு மட்டுமே. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது மோசடியாக தீர்ப்பு பெற்றது உறுதியானால் இந்த தீர்ப்பு ரத்தாக வாய்ப்புள்ளது..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரவில்லை.. ஆனால் தீர்ப்பை வரவேற்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.. சிபிஐ விசாரணையை கோராத அவர்கள் எதற்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை கொண்டாடுகிறார்கள் கொண்டாடுகிறார்கள் என்பது புரியவில்லை.. இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது.. ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார்.. திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வழங்கியது என்று ஆதவ் அர்ஜூனா கூறியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்..” என்று தெரிவித்தார்.