“இது தான் கடைசிப் படம்.. கடையை மூடப் போறேன்..” ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய இயக்குனர் வெற்றிமாறன்..!

vetrimaran

இனி, திரைப்படங்கள் தயாரிக்கப்போவதில்லை என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்..

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் இருக்கிறார்.. இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களை இயக்கி உள்ளார்.


தனது தனித்துவமான திரைக்கதை, விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்ட படைப்புகளுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 5 தேசிய திரைப்பட விருதுகள், 3 பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார்.

மேலும் தனது Grass Root Film Company என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை, சங்கத்தலைவன், விடுதலை 1, விடுதலை 2, கருடன், சர், பேர்ட் கேர்ள் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்..

இந்த நிலையில் இனி, திரைப்படங்கள் தயாரிக்கப்போவதில்லை என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ தணிக்கைக் குழு தான் யார் யார் எந்த படத்தை பார்க்கலாம் என்று தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது.. அந்த அமைப்பு பேட் கேர்ள் படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.. மனுதி திரைப்படமும் மிகப்பெரிய போராட்டத்தை கடந்து, நீதிமன்றம் சென்று தான் வந்துள்ளது..

தயாரிப்பாளராக இருப்பது எனக்கு பெரிய சவாலாக உள்ளது.. சின்ன தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி தான் படமெடுக்கிறோம்.. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.. அதனால் பேர்ட் கேர்ள் Grassroot நிறுவனத்தின் கடைசி படமாக இருக்கும்.. அதன்பின்னர் Grassroot பட தயாரிப்பு நிறுவனத்தின் கடையை சாத்துறோம்..” என்று தெரிவித்தார்.

Read More : பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு..!! காரணம் என்ன..? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு..!!

RUPA

Next Post

நாதஸ்வரம் சீரியல் சகோதரிகளை ஞாபகம் இருக்கா.? அதாங்க நம்ம மகேஷ், காமு, பரமு, ராகினி.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

Mon Sep 1 , 2025
Do you remember the sisters from the Nathaswaram serial?
nathaswaram 3 2024 01 da58d408dfef75bfa6a90f1bb76db587 1

You May Like