“இது சரியல்ல.. கலகமூட்டும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீங்க..” காமராஜர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்..

MK Stalin dmk

பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும் கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்..

பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு பயணியர் விடுதியிலும் திமுக ஆட்சி காலத்தில் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக திருச்சி சிவா கூறியிருந்தார்..


அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு திமுகவே காரணம்.. மானமுள்ள காங்கிரஸ் கட்சி இனியும் கூட்டணியில் தொடர வேண்டுமா? அண்ணாமலை அட்டாக்..

RUPA

Next Post

“அமித்ஷா சொல்வதே வேத சத்தியம்.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்..” மீண்டும் கொளுத்திப் போட்ட அண்ணாமலை..

Thu Jul 17 , 2025
Annamalai has said that what Amit Shah says is the Vedic truth for me and that a coalition government will be formed in Tamil Nadu.
Untitled design 2025 03 27T164320.619

You May Like