2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த விவரங்களை, ஊழியர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத தொழில்முறை நெட்வொர்க் தளமான Blind வெளியிட்டுள்ளது.
Blind வெளியிட்ட பட்டியலில், ஊழியர் திருப்தி அடிப்படையில் NVIDIA, Google, Apple ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த பட்டியல் Blind தளத்தில் பதிவு செய்த ஊழியர்கள் அளித்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
Blind என்றால் என்ன?
Blind என்பது ஒரு அடையாளம் தெரியாத தொழில்முறை சமூக தளம். இதில், சரிபார்க்கப்பட்ட ஊழியர்கள் தங்களின் வேலை அனுபவம், பணிச்சூழல், வேலை–வாழ்க்கை சமநிலை, தொழில் வளர்ச்சி போன்ற விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாம். பதிவு செய்யும் பயனர்கள் உண்மையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்களா என்பதை, அவர்களின் வேலை தொடர்பான மின்னஞ்சல் மூலம் Blind சரிபார்க்கிறது.
2026-ல் இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் (1–15)
என்விடியா (NVIDIA)
கூகுள் (Google)
ஆப்பிள் (Apple)
அகமாய் டெக்னாலஜிஸ் (Akamai Technologies)
விஎம்வேர் (VMware)
அடோப் (Adobe)
டார்கெட் ((Target)
க்ரெட் (CRED)
நோக்கியா (Nokia)
தாட் ஒர்க்ஸ் (ThoughtWorks)
ஏர்பிஎன்பி (Airbnb)
லோவ்ஸ் (Lowe’s)
ஆட்டோடெஸ்க் (Autodesk)
ஸோஹோ (Zoho)
சர்வீஸ் நவ் (ServiceNow)
இந்தியாவில் குறைந்த மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள்
டிபி வேர்ல்டு (DP World)
ஓலா (Ola)
ஸ்பிரிங்க்லர் (Sprinklr)
க்ரூப்கான் (Groupon)
டெக்கியோன் (Tekion Corp)
பேடிஎம் (Paytm)
ஓயோ (OYO)
ஸெட்டா (Zeta)
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics)
ஹெச்.சி.எல். எண்டெர்பிரைஸ் (HCL Enterprise)
டெலிவெரோ (Deliveroo)
கம்பஸ் (Compass)
ரிப்லிங் (Rippling)
இன்ஃபோசிஸ் (Infosys)
கேஷ்ஃப்ரீ (Cashfree)
இந்த தரவரிசை எவ்வாறு கணக்கிடப்பட்டது?
Blind தளத்தில் இந்திய தொழில்முனைவோர் அளித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2025 வரை, இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அளித்த 40,686 சரிபார்க்கப்பட்ட மதிப்பீடுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொருத்தமான முடிவுகளை உறுதி செய்ய, குறைந்தது 50 மதிப்பீடுகள் பெற்ற நிறுவனங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை, மொத்த திருப்தி, தொழில் வளர்ச்சி, வேலை–வாழ்க்கை சமநிலை, சம்பளம் மற்றும் பலன்கள், நிறுவன பண்பாடு, மேலாண்மையின் மீது நம்பிக்கை போன்ற பல அம்சங்களில் மதிப்பீடு செய்துள்ளனர்.
அதில் அதிக மொத்த திருப்தி பெற்ற நிறுவனங்கள் “சிறந்த நிறுவனங்கள்” பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறைந்த மதிப்பெண்கள் பெற்றவை “குறைந்த மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.



