ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் மரணத்திற்கு காரணம் இதுதான்..!! – அதிர்ச்சி பின்னணி

michael madsen

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 67. ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட் என பல ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது கைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளி வந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளது.


அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்சனையால் அவர் மரணமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வந்தார். கடந்த 2022ல் அவரது மகன் ஹட்சன் மேட்சன் தற்கொலை செய்துகொண்டார், தொடர்ந்து, கடந்தாண்டு தன் மனைவி டியானாவை விட்டும் பிரிந்தார்.

மேலும், குடும்ப வன்முறை புகாரின் பேரில் டியானா அளித்த புகாரில், மைக்கேல் மேட்சன் கைது செய்யப்பட்டார். இப்படி தொடர் போராட்டங்களால் சூழப்பட்டிருந்த நிலையில் கலிபோர்னியாவின் மாலிபுவில் உள்ள தனது வீட்டில் ஜூலை 4 ஆம் தேதி மைக்கேல் மேட்சன் காலமானார்.

மைக்கேல் மேட்சனின் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், 1992ல் வெளியான இயக்குநர் க்வென்டின் டரான்டினோவின் ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ என்ற திரைப்படம் மூலம் மைக்கேல் மேட்சன் உலகப் புகழ் பெற்றார்.

Read more: 10 வருஷம் குழந்தை இல்லை.. கழிவறை நீரை குடித்த இளம் பெண்.. மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!! பகீர் பின்னணி..

Next Post

ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Thu Jul 10 , 2025
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு […]
heirloom jewellery symbol of tradition and love 1 1

You May Like