கூலி படத்தின் புரோமோஷனுக்காக அமேசான் நிறுவனத்துடன் சன் பிக்சர்ஸ் கை கோர்த்துள்ளது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு இப்போதே தொடங்கி விட்டது..
கூலி படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் அமேசான் மூலம் டெலிவரியாகும் பொருட்களில் கூலி பட ஸ்டிக்கரை ஒட்டி டெலிவரி செய்ய உள்ளார்களாம்.. தமிழ்நாடு மட்டுமின்றி, டெல்லி, நொய்டா, புனே, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமேசான் நிறுவனம் கூலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெட்டிகள் மூலம் டெலிவரி செய்ய உள்ளது.. இதன் மூலம் இந்தியா முழுவதும் அமேசான் நிறுவனம் மூலம், பொருட்கள் வாங்கும் வீடுகளில் கூலி போஸ்டர்கள் இடம்பெறும்..
சன்பிக்சர்ஸ் நிறுவனம் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.. மேலும் ஒரு இந்திய படத்திற்கு இது போல் விளம்பரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய புரோமோஷனாக அமையும் என்று கூறப்படுகிறது.. மேலும் கூலி படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளது.. அன்றைய தினமே கூலி படத்தின் ட்ரெய்லரும் வெளியாக உள்ளது.. மேலும் இந்த விழாவில் ரஜினியும் பேசுவார். எனவே இந்த நிகழ்ச்சியும் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்..
கூலி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தெலுங்கு, கன்னடம், பாலிவுட் படங்கள் அசால்டாக ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்து வருகிறது.. ஆனால் இதுவரை எந்த தமிழ்ப்படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை.. எனவே கூலி படம் முதல் 1000 கோடி வசூல் படமாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
Read More : எந்த உச்ச நடிகரோ, நடிகையோ இல்லை.. வெறும் 11 நாட்களில் ரூ.404 கோடி வசூல்.. பல சாதனைகளை முறியடித்த படம்..